கேரட் கழுவும் இயந்திரத்தில் சிக்கிய துப்பட்டா: துண்டான இளம்பெண் தலை!

 

கேரட் கழுவும் இயந்திரத்தில் சிக்கிய துப்பட்டா:  துண்டான இளம்பெண் தலை!

நந்தினி 10-ம் வகுப்பு வரை படித்து உள்ள நிலையில் தனது தாய் சுமித்ராவுடன் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார். 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எதுமை கண்டி பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவருக்கு  சுமித்ரா என்ற மனைவியும்,  2 மகன்களும், நந்தினி 18 வயதான  மகளும் உள்ளனர். நந்தினி 10-ம் வகுப்பு வரை படித்து உள்ள நிலையில் தனது தாய் சுமித்ராவுடன் விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார். 

tt

 

அதன்படி  நேற்று அதிகாலை 3 மணியளவில் ஊட்டி அருகே எப்பநாடு பகுதியில் ஒரு தோட்டத்தில் கேரட் அறுவடை செய்வதற்காக சுமித்ரா, நந்தினி ஆகிய 2 பேரும்  சென்றனர். அங்கு கேரட்டுகள் அறுவடை செய்யப்பட்ட நிலையில் அதை இயந்திரத்தில்  கழுவி தரம் பிரிக்கும் பணியில் அவர்கள் ஈடுப்பட்டு  வந்தனர். 

அப்போது எதிர்பாராதவிதமாக நந்தினியின் துப்பட்டா, கேரட் கழுவும் இயந்திரத்தில் சிக்கியது. எந்திரம் வேகமாக சுழன்று கொண்டு இருந்ததால், கண்ணிமைக்கும் நேரத்தில் தலை துண்டாகி பலியானார்.  இதை கண்ட அவரது தாய் சுமித்ரா கதறி அழுதார்.  

tt

இதுகுறித்து தகவல் அறிந்த கேத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த வழக்குப்பதிவு செய்து  போலீசார் நடத்தினர். பின்னர் நந்தனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.  இதனிடையே சம்பவ இடத்துக்கு குன்னூர் தாசில்தார் குப்புராஜ் தலைமையிலான அதிகாரிகள் ,  உரிய பாதுகாப்பு இன்றி இயங்கியதாக கூறி அந்த கேரட் கழுவும் இயந்திரம் உள்ள நிலையத்துக்கு ‘சீல்’ வைத்ததுடன்,  மின் இணைப்பையும் தூண்டித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.