கேம் ஓவரில் மிரட்டும் டாப்ஸி : வெளியானது திகில் டிரைலர்!

 

கேம் ஓவரில் மிரட்டும் டாப்ஸி : வெளியானது திகில் டிரைலர்!

தமிழில் ‘மாயா’ படத்தை இயக்கிய  டாப்ஸி நடித்துள்ள ‘கேம் ஓவர்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழில் ‘மாயா’ படத்தை இயக்கிய  டாப்ஸி நடித்துள்ள ‘கேம் ஓவர்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கேம் ஓவர்’. வீடியோ கேம் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் அஷ்வின் சரவணன் இயக்கியுள்ளார். மேலும் இதில்  அனிஷ் குருவில்லா, வினோதினி வைதிநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

tapsee

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி  நல்ல வரவேற்பைப் பெற்றநிலையில், தற்போது இதன் டிரைலர் வெளியாகியுள்ளது. ஹாரர் த்ரில்லர் ஜானரில் உள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் ஜூன் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

 

இந்நிலையில் இப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் தனுஷும், தெலுங்கு டிரைலரை நடிகர் ராணா டகுபதியும், இந்தி டிரைலரை நடிகை டாப்ஸியும் வெளியிட்டுள்ளனர். சரியாக ஒரு நிமிடம் 56 வினாடிகள் ஓடக்கூடிய இந்த டிரைலரில் பெரும்பாலான காட்சிகள் இருளிலேயே நடப்பதால் கூடுதல் திகிலை ஏற்படுத்துகிறது.

tapsee

கடைசியாக தமிழில்  நடிகை டாப்ஸி வை ராஜா வை படத்தில் நடித்திருந்தார். தற்போது டாப்ஸி ஜெயம் ரவியுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.