‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகை தற்கொலை முயற்சி: நெட்டிசன்களால் நடந்த விபரீதம்!

 

‘கேம் ஆப் த்ரோன்ஸ்’  நடிகை தற்கொலை முயற்சி: நெட்டிசன்களால் நடந்த விபரீதம்!

‘கேம் ஆப் த்ரோன்ஸ்’  திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை சோஃபி டர்னர்  தற்கொலை முயற்சி செய்ததாகத் தெரிவித்துள்ளார். 

‘கேம் ஆப் த்ரோன்ஸ்’  திரைப்படத்தில் நடித்து வரும் நடிகை சோஃபி டர்னர்  தற்கொலை முயற்சி செய்ததாகத் தெரிவித்துள்ளார். 

game of thrones

ஏழு பெரும் தேசங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய ராஜ்ஜியத்தின் சக்ரவர்த்தி யார் என்று பலரும் சண்டையிட்டுக் கொள்வதே  கேம் ஆப் த்ரோன்சின் கதை.  1991ம் ஆண்டு ஜார்ஜ் ஆர்.ஆர்.மார்ட்டின் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டது. முதல் பாகம் 2011ம் ஆண்டு வெளியாகி வரும் இதில்  இதுவரை மொத்தம் 7 சீசன்கள் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் அண்மையில் இறுதி சீசனான 8வது சீசன்  சமீபத்தில் வெளியானது.

sophie

ஜான் ஸ்னோ ஆக கிட் ஹாரிங்டன் 8-வது சீசனில் நடிக்கிறார். இப்படத்தில் சான்ஸா ஸ்டார்க் வேடத்தில் நடிகை சோஃபி டர்னர் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேம் ஆப் த்ரோன்ஸ் அனுபவம் குறித்துக் கூறியுள்ளார்  சோஃபி டர்னர். அதில், சான்ஸா ஸ்டார்க் கதாபாத்திரம் வலைதளவாசிகளால் அதிகம், விமர்சிக்கப்பட்டது.   நான் ஒரு மோசமான நடிகை, நான் குண்டாக இருக்கிறேன் என்று நானும்  நம்ப துவங்கினேன். இதனால்  நான்  என்னைத் தனிமைப்படுத்திக்கொண்டேன். என் குடும்பத்தினரிடமும், என் நண்பர்களிடமும் பேசுவதைத்  தவிர்த்தேன். எப்போதும் அழுது கொண்டே இருந்தேன். ஒருகட்டத்தில் நான் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்குத் தள்ளப்பட்டேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

game of thrones

இதை தொடர்ந்து மனநல மருத்துவரின் ஆலோசனையை பெற்ற சான்ஸா ஸ்டார்க், தன் மீதான வெறுப்பை போக்கிக்கொண்டதுடன் தன்னையே காதலிக்கவும் தொடங்கியுள்ளார்.  இருப்பினும் தன்னுடைய விடாமுயற்சியினால் அவர் தொடர்ந்து  கேம் ஆப் த்ரோன்ஸ் வெப் சீரிஸில்   நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: தகாத உறவில் ஈடுபட்ட மனைவி: தலையை வெட்டி ஊர்வலம் எடுத்து சென்ற கணவன்: அதிர வைக்கும் வாக்குமூலம்!