‘கேப்டன் மார்வல் 2’ வெளியாவது உறுதி – வாண்டாவிஷன் எழுத்தாளருடன் பேச்சுவார்த்தை

 

‘கேப்டன் மார்வல் 2’ வெளியாவது உறுதி – வாண்டாவிஷன் எழுத்தாளருடன் பேச்சுவார்த்தை

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கேப்டன் மார்வல்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ்: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கேப்டன் மார்வல்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்பட தொடரில் ‘கேப்டன் மார்வல்’ திரைப்படம் வெளியானது. அவெஞ்சர்ஸ்: எண்டு கேம் படத்திற்கு முந்தைய படம் என்பதால் உலகம் முழுக்க ரசிகர்கள் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து பார்த்தார்கள். அவெஞ்சர்ஸ் படை எதற்காக உருவாக்கப்பட்டது, அந்தப் படைக்கு எதனால் அவெஞ்சர்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டது, நிக் பியூரியின் கண்ணுக்கு என்ன ஆனது போன்ற முக்கியமான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ‘கேப்டன் மார்வல்’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

ttn

மேலும் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் படத்தின் இறுதியில் நிக் பியூரி யாருக்கு மெசேஜ் அனுப்பி விட்டு மறைந்தார் என்பதற்கான பதிலும் இப்படத்தில் இருந்தது. இவ்வாறு பல சிறப்பம்சங்களுடன் முதல் மார்வல் பெண் சூப்பர் ஹீரோ கொண்ட படமாக ‘கேப்டன் மார்வல்’ வெளியாகி வசூலில் சக்கைப்போடு போட்டது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் சுமார் ஒரு பில்லியன் டாலர் வசூலைக் கடந்து சாதனை படைத்தது.

இதைத் தொடர்ந்து, கேப்டன் மார்வல் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று மார்வல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டுக் கொண்டே இருந்தனர். இந்நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கேப்டன் மார்வல்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. டிஸ்னி பிளஸ் மொபைல் ஆப்-இல் வெளியான வாண்டாவிஷன்மினி சீரீஸின் எழுத்தாளர் மேகன் மெக்டானல் கேப்டன் மார்வல்-2 படத்துக்கு கதை எழுத இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வருகிற 2022-ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தியால் மார்வல் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.