கேப்டனுக்கு பிடிச்ச எம்.ஜி.ஆர் பாட்டு! இது கேப்டனுக்கு தெரியுமா !?

 

கேப்டனுக்கு பிடிச்ச எம்.ஜி.ஆர் பாட்டு! இது கேப்டனுக்கு தெரியுமா !?

சிவாஜி பாடலை எம்ஜிஆர் பாடல் எனத் தவறாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியது தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

திருச்சி: சிவாஜி பாடலை எம்ஜிஆர் பாடல் எனத் தவறாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியது தொண்டர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

தேர்தல் பரப்புரை

preamalatha

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் குறிப்பாக திமுகவின் கூட்டணிக் கட்சிகளை  ஆதரித்து முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்வதும், அதிமுக கூட்டணி கட்சியான பாமகவுக்காக முதல்வர் எடப்பாடி களமிறங்கியதும் தேர்தல் பிரசாரத்தைக் கூடுதல் சுவாரஸ்யமாக மாற்றியுள்ளது. 

எம்ஜிஆர் பாடல்களைத் தான் பாடுவார்

mgr

இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சிகளின் திருச்சி மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ‘ கேப்டனுக்கு  ஸ்பீச் தெரபி  கொடுக்கப்பட்டு வருகின்றது. அதனால் அவர் ஏதாவது ஒரு பாடலை பாட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். அப்போது கூட அவர் எம்ஜிஆர் பாடல்களைத் தான் பாடுவார். அவர் நடிப்பில் எத்தனையோ பாடல்கள் வெளியாகியுள்ளது. ஆனாலும்  அவர் விரும்பி பாடுவது எம்ஜிஆர் பாடல்களைத் தான்.அதிலும் குறிப்பாக அவர் விரும்பி பாடுவது, ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற பாடல் தான். அந்தளவு அவர் எம்ஜிஆரை நேசித்தவர். அவர் மீது அவ்வளவு மரியாதை கொண்டவர்’ என்றார்.

சிரிக்காமல் பின் என்ன செய்வார்கள்?

sivaji

பிரேமலதாவின் இந்த பேச்சு அங்கிருந்தவர்கள் மத்தியில் புன்முறுவலை ஏற்படுத்தியது. ஏன் தெரியுமா? கேப்டன் எம்ஜிஆர் ரசிகர்,அவர் எம்ஜிஆர் பாடல்களைத் தான் படுவார் என்று பெருமை பேசிய, பிரேமலதா ‘ஒளிமயமான எதிர்காலம்’ என்ற பாடலை குறிப்பிட்டார். உண்மையில் அந்த பாடல்  நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் உருவான பச்சை விளக்கு படத்தில் இடம்பெற்றது. இதை கேட்ட எம்ஜிஆரின் தீவிர ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும் சிரிக்காமல் பின் என்ன செய்வார்கள்?  இதனால், மேடையிலிருந்தவர்களிடையே சலசலப்பு ஏற்பட்ட தான் மிச்சம். 

எம்ஜிஆரின் பெயரை சொல்லியோ அல்லது மறைந்த தலைவர்களின் பெயர்களைச் சொல்லியோ ஓட்டு கேட்பவர்கள், கொஞ்சமாவது அவர்களைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தால் அதை சொல்பவர்களும் சரி, கேட்பவர்களும் சரி முகம் சுழிக்காமல் இருக்கலாம். 

இதையும் வாசிக்க: மாத்திரை போட்டுக்கொண்டு நயன்தாரா படம் பாருங்கள்: ராதா ரவியை கிண்டல் செய்த சமந்தா!