“கேன் வில்லியம்சனை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன்!” – நியூசிலாந்து கேப்டனை புகழ்ந்த கே.எல்.ராகுல்

 

“கேன் வில்லியம்சனை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன்!” – நியூசிலாந்து கேப்டனை புகழ்ந்த கே.எல்.ராகுல்

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

வெல்லிங்டன்: இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து அங்கு விளையாடி வருகிறது. முதலில் டி20 தொடரில் பங்கேற்ற இந்திய அணி, நியூசிலாந்தை ஐந்து போட்டிகளிலும் வென்று வொய்ட் வாஷ் ஆக்கியது. இந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர் கே.எல்.ராகுல் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் இத்தொடரில் மொத்தம் 224 ரன்களை குவித்தார். இதில் 2 அரை சதங்கள் அடங்கும். இந்நிலையில், கே.எல்.ராகுல் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “கடந்த 2014-2015 காலகட்டத்தில் ஐ.பி.எல் போட்டிகளின்போது சன்ரைசஸ் அணிக்காக விளையாடியபோது கேன் வில்லியம்சனுடன் நிறைய நேரம் செலவழித்திருக்கிறேன். பேட்டிங் குறித்து அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். அவருடைய பேட்டிங் ஸ்டைலும், என்னுடையதும் ஒரே மாதிரி இருப்பதாக கருதுகிறேன். அவர் பேட்டிங் செய்வதை பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன். கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்வதை பார்ப்பது விருந்தாக இருக்கும். ஆனால், அடுத்து வரும் ஒருநாள் தொடரில் அவரை அவ்வாறு பேட்டிங் செய்ய விட மாட்டோம்” என்றார்.