கேன்சர் எனக்கு உயிர் பயத்தை அளிக்கவில்லை; பசார் இந்தியா மாடலான சோனாலி

 

கேன்சர் எனக்கு உயிர் பயத்தை அளிக்கவில்லை; பசார் இந்தியா மாடலான சோனாலி

அனுபவங்கள் உங்களை எப்படி வடிவமைக்கும் என வார்த்தையால் விவரிக்க இயலாது. எல்லா மாற்றங்களும் கண்ணுக்கு புலப்படுவதில்லை. எதிலும் பின்வாங்க கூடாது என கற்றுக்கொண்டேன்.

கேன்சர் நோய் வயிறு பகுதி முழுவதும் பரவியிருக்கும் வேளையிலும், உற்சாகம் குறையாமல், உத்வேகம் அளிக்கும் வகையில் பேசுகிறார் நடிகை சோனாலி பிந்த்ரே.

இந்திய அளவில் திரைத்துறை பிரபலங்கள் பலரும் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இர்பான் கான், மனிஷா, கவுதமி என இந்த நீளும் பட்டியலில் நடிகை சோனாலி பிந்த்ரேவும் உள்ளார். இவர்கள் எல்லாம் உடைந்து சோர்ந்துவிடாமல், பிறருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கேன்சரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சோனாலி, மற்றவர்களுக்கு கேன்சர் பற்றிய பயத்தை போக்கும் வகையில் தொடர்ந்து செயல்படுகிறார்.

சோனாலி

சோனாலி பிந்த்ரேவுக்கு கேன்சர் நோய் வயிறு பகுதி முழுவதும் பரவி விட்டது. இதுகுறித்து சோனாலி, கேன்சர் என் வயிறு பகுதி முழுவதும் பரவியிருக்கலாம். ஆனால் அது எனக்கு உயிர் பயத்தை அளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

சோனா

பசார் இந்தியா பத்திரிகைக்கு கவர் போட்டோ மாடலாக சோனாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த படத்தை பதிவிட்டு, அனுபவங்கள் உங்களை எப்படி வடிவமைக்கும் என வார்த்தையால் விவரிக்க இயலாது. எல்லா மாற்றங்களும் கண்ணுக்கு புலப்படுவதில்லை. எதிலும் பின்வாங்க கூடாது என கற்றுக்கொண்டேன். நான் அழகாக மேக்கப் செய்துகொள்வேன், அழகான ஆடை அணிந்துகொள்வேன். இப்படிதான் என் பசார் இந்தியா போட்டோஷூட்டை பற்றி விவரிக்க விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

சோனா

இதற்கு முன்பு சோனாலி, #MujheSabNahiPata எனும் பெண்களுக்கான விழிப்புணர்வு விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இதையும் படிங்க: 99’ ஆக மாறிய ராம்-ஜானு: சகட்டு மேனிக்கு கலாய்க்கும் நெட்டிசன்கள்!