கேட்டது அமைச்சர் பதவி, கிடைத்தது தொழில்துறை கட்டமைப்பு தலைவர் பதவி!

 

கேட்டது அமைச்சர் பதவி, கிடைத்தது தொழில்துறை கட்டமைப்பு தலைவர் பதவி!

ரோஜாவை சமாதானப்படுத்தும்விதமாக, ஆந்திர மாநில தொழில்துறை கட்டமைப்பு நிறுவன தலைவராக ரோஜாவை அறிவித்தார் ஜெகன்மோகன். அறிவிப்பு வெளியாகி சில நாட்கள் ஆகிய நிலையில், கடந்த திங்களன்று தொழிற்துறை முதலீட்டுக் கழக அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஆந்திராவில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றிக்கு ரோஜாவும் அணிலாக இருந்து தனது கடமையைச் செய்தார். ஆனால், அமைச்சரவையின்போது ரோஜாவுக்கு பெப்பே காட்டப்பட்டது. கடும் அதிருப்தியில் இருந்த ரோஜா, அமைச்சரவை பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை புறக்கணித்தார். ரோஜாவை சமாதானப்படுத்தும்விதமாக, ஆந்திர மாநில தொழில்துறை கட்டமைப்பு நிறுவன தலைவராக ரோஜாவை அறிவித்தார் ஜெகன்மோகன். அறிவிப்பு வெளியாகி சில நாட்கள் ஆகிய நிலையில், கடந்த திங்களன்று தொழிற்துறை முதலீட்டுக் கழக அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.

Roja Taking charge

பொறுப்பேற்றப்பின் பேசிய ரோஜா, ‘ஆந்திராவில் தொழில் துறை அபிவிருத்தி ஏற்படவேண்டும் என்பதில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அக்கறையோடு இருப்பதாகவும், முதலீட்டாளர்கள் ஆந்திராவில் தொழில் தொடங்க முன்வரவேண்டும் என்றும், உள்ளூரை சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு, தேவையான உதவிகள் செய்து கொடுக்கப்படும்” என்றும் உறுதியளித்தார். தமிழ் சினிமாவில் முதலீடு செய்யச்சொல்லி ஆர்.கே.செல்வமணி சார் ரெக்கமண்ட் பண்ணுவாரான்னு தெரியலை!