கொரானோ நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதால் பக்கத்துவீட்டுக்காரர் துன்புறுத்துவதாக பெண் மருத்துவர் புகார்!

 

கொரானோ நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதால் பக்கத்துவீட்டுக்காரர் துன்புறுத்துவதாக பெண் மருத்துவர் புகார்!

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. இதுவரை 24,942 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 5, 498 பேர் கொரோனா நோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர். மேலும் இதுவரை கொரோனா தொற்றுநோய்க்கு 780 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் அதிகரித்து வருகிறது. இதுவரை 24,942 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 5, 498 பேர் கொரோனா நோயிலிருந்து மீண்டு வந்துள்ளனர். மேலும் இதுவரை கொரோனா தொற்றுநோய்க்கு 780 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் உட்பட பல துறையை சேர்ந்தவர்கள் கொரோனாவை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். குடும்பங்களை மறந்து இரவு பகல் பாராமல் உழைக்கும் மருத்துவர்களுக்கு அண்மை காலமாக அநீதிகள் அரங்கேறிவருகின்றன.

doctors

கொரோனா வைரஸால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மனம் வராத சென்னை மக்களின் செயலே அதற்கு சாட்சி. இதற்கிடையில் கொரோனா வைரஸ் எனும் தொற்று நோயை எதிர்த்து மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் போரிட்டு வருகின்றனர். எனவே மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மேலும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசர சட்டமும் மத்திய அரசால் இயற்றப்பட்டது. 

coronavirus

இந்நிலையில் கொரானோ நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதால் தன்னை பக்கத்து வீட்டுக்காரர்கள் குடியிருப்புக்குள் அனுமதிக்காமல் துன்புறுத்துவதாக ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த மனுவில், “மருத்துவமனையில் பணியாற்றிவிட்டு வீடு திரும்பும் தன்னை அக்கம்பக்கத்தினரும், குடியிருப்புவாசிகளும் தரக்குறைவாக பேசுகின்றனர். என்னை வீட்டுக்கு செல்லவும் அனுமதிக்க மறுக்கிறார்கள். என் சகோதரர் வீட்டிற்கு செல்வதற்கு முயற்சித்தால் அங்கேயும் இதே நிலைமை தான்” என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தெலங்கானா மாநில மருத்துவச் சங்கத்தினர் காவல்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.