கெட்ட கொழுப்பை கரைக்கும் எலுமிச்சை

 

கெட்ட கொழுப்பை கரைக்கும் எலுமிச்சை

மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது.

சுப நிகழ்ச்சிகளில் முதல் இடம் வகிக்கும் பழம் எலுமிச்சையாகும். இந்த பழம் உலகெங்கும் நிறைந்து காணப்படுகிறது.

விலை மலிவாகவும், எல்லா சத்துக்களும் உடையப் பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.

மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது.

மேலும் எலுமிச்சைப் பழத்தில் மட்டுமல்லாமல், அதன் தோலிலும் ஏராளமான மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. எனவே முழு எலுமிச்சைப் பழத்தையும் நீரில் வேகவைத்து குடிப்பதால், கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கு காண்போம்.

எலுமிச்சை நீர் செய்ய 
தேவையானவை:-

எலுமிச்சைப்பழம் – 10

தேன் – தேவையான அளவு

தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:-

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 10 எலுமிச்சைப் பழங்களை பாதியாக வெட்டிப் போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

பின்னர் 5 நிமிடம் அந்த நீரை நன்கு கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின், அந்நீரை 10 – 15 நிமிடங்கள் குளிர வைத்து, வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு வடிகட்டிய அந்த எலுமிச்சை நீரில், சிறிதளவு தேன் கலந்து குடிக்க வேண்டும்.

நன்மைகள்:

எலுமிச்சைப் பழத்தை வேக வைத்த நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

தினமும் எலுமிச்சை நீரை குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

அதுமட்டுமில்லாமல் தினமும் எலுமிச்சை நீர் குடிப்பதால் உடல் சோர்வு நீங்கி, சுறுசுறுப்புத் தன்மை அதிகரிக்க உதவுகிறது.

 
தினமும் எலுமிச்சை நீர் குடிப்பதால் செரிமானப் பிரச்னை தீரும் மற்றும் மெட்டாபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது.

எலுமிச்சை நீரில் உள்ள சத்துக்கள் நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதும் சுத்தமாக இருக்க உதவுகிறது.
 
தினமும் எலுமிச்சை நீர் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் கரைக்கப்பட்டு, உடல் எடையை சீராக வைத்துக் கொள்ளலாம்.