கூலி தொழிலாளியும் வரி செலுத்துறாங்க… ஆனா அது மறைமுக வரி….. பாலிவுட் நடிகைக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர்….

 

கூலி தொழிலாளியும் வரி செலுத்துறாங்க… ஆனா அது மறைமுக வரி….. பாலிவுட் நடிகைக்கு பதிலடி கொடுத்த துணை முதல்வர்….

தினக் கூலியும் வரி செலுத்துறாங்க ஆனா அது மறைமுக வரி என நடிகை கங்கணாவுக்கு டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா பதிலடி கொடுத்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரனவுத் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் பங்கா. இந்த படத்தின் டிரைலர் வெளியீடு நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கங்கணா பேசுகையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை கடுமையாக தாக்கி பேசினார். மேலும் பஸ்கள், ரயில்களை எரிக்க மற்றும் நாட்டில் கொந்தளிப்பை உருவாக்க யார் உரிமை கொடுத்தது? ஒரு பஸ்சின் விலை 60 முதல் 80 லட்சம் ரூபாயாகும். இது சின்ன தொகை கிடையாது. நாட்டில் சிலர் மட்டுமே வரியை செலுத்துகின்றனர். மற்றவர்கள் அவர்களை சார்ந்து உள்ளனர் என பேசினார்.

நடிகை கங்கணா

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கங்கணாவின் கருத்துக்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் டிவிட்டரில், வன்முறை மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்துவது எந்தவொரு சூழ்நிலையிலும் தவறுதான். ஆனால் இந்த நாடு வரி செலுத்தும் 3 சதவீத மக்களை சார்ந்து இல்லை. தினக்கூலி முதல் கோடீஸ்வரர்கள் வரை நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் வரி செலுத்துகின்றனர். 

கூலி தொழிலாளர்கள்

தினக்கூலியும் தனது அன்றாட வருமானத்தில் வரி செலுத்துகிறார். ஆனால் அது நேரடி வரியல்ல மறைமுக வரி. கூலி தொழிலாளி சினிமா செல்கிறார் என்றால், சினிமா நட்சத்திரங்களின்  வருமானத்தில் அதன் பங்களிப்பு உள்ளது மற்றும் அரசுக்கும் வரி (பொழுதுபோக்கு வரி) செலுத்துகிறார். இப்பம் யோசிங்க யாரு யாரை சார்ந்து இருக்காங்கன்னு? என பதிவு செய்து உள்ளார்.