கூட்டல்கூட தெரியவில்லை… நீங்கெல்லாம் டீச்சர்! ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய கல்வித்துறை!!

கூட்டல்கூட தெரியவில்லை… நீங்கெல்லாம் டீச்சர்! ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய கல்வித்துறை!!

பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் போது கூட்டலில் தவறு செய்ததாக 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் போது கூட்டலில் தவறு செய்ததாக 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. தேர்வு முடிவைத் தொடர்ந்து மதிப்பெண் குறைவாகப் பெற்றுள்ள மாணவர்கள் விடைத்தாள் நகலை வாங்கி பார்த்துள்ளனர். அப்போது விடைத்தாள் திருத்தும் போது கூட்டலில் தவறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, 100க்கு 72 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு 27 மதிப்பெண் பெற்றதாகவும், 81 மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு 57 பெற்றதாக இருந்ததாகவும் தெரியவந்தது. ஒரு சில விடைத்தாள்கள் முறையாகத் திருத்தப்படாமல் மதிப்பெண் வழங்கப்படாமல் இருந்ததும் தெரியவந்தது. இதுபோன்று 30 சதவிகித விடைத்தாளில் கூட்டல் தவறாக இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. 

இந்த தவறு பள்ளிக்கல்வித்துறையின் பக்கம் திரும்ப, விடைத்தாள் பிழைகள் குறித்து மறு  மதிப்பீடு செய்துள்ளது. அப்போது திருத்தலின் போது கவனக் குறைவாக இருந்த 500 ஆசிரியர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கு நோட்டிஸ் அனுப்பி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.