கூட்டணி கட்சிகளுக்கு வேட்டு வைத்த எடப்பாடி! தேர்தலுக்கு முன் இன்னும் பல அதிரடி திட்டங்கள்!

 

கூட்டணி கட்சிகளுக்கு வேட்டு வைத்த எடப்பாடி! தேர்தலுக்கு முன் இன்னும் பல அதிரடி திட்டங்கள்!

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறுவதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில், தேர்தல் திருவிழா இப்போதே களைக் கட்டத் துவங்கியுள்ளது. திமுக, அதிமுக என இருகட்சிகளும் தேர்தல் வேலைகளில் இப்போதே பரபரப்பாக ஈடுபடத் துவங்கிவிட்டனர். இந்த முறை தமிழகத்தின் முக்கிய நகரங்களை தங்களது கைக்குள் வைத்துக் கொள்ள அதிமுக திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைப்பெறுவதற்கான அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில், தேர்தல் திருவிழா இப்போதே களைக் கட்டத் துவங்கியுள்ளது. திமுக, அதிமுக என இருகட்சிகளும் தேர்தல் வேலைகளில் இப்போதே பரபரப்பாக ஈடுபடத் துவங்கிவிட்டனர். இந்த முறை தமிழகத்தின் முக்கிய நகரங்களை தங்களது கைக்குள் வைத்துக் கொள்ள அதிமுக திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே தமிழகத்தில் மேயர் உள்ளிட்ட தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் என்று எடப்பாடி அரசு அவசர அவசரமாக சட்டம் கொண்டு வந்திருக்கிறது என்கிறார்கள்

admk

. இந்த மறைமுகத் தேர்தலினால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டிருப்பதாகவும் காதைக் கடிக்கிறார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர் மேயர் பதவிகளைத் தொடர்ந்து கேட்டு வந்ததாகவும், இப்படி மறைமுகத் தேர்தல் அறிவித்து விட்டால், எப்படியும் கவுன்சிலர் பதவிகளுக்கு பெருவாரியான இடங்களில் அதிமுக தான் நிற்கும். கூட்டணியில் உள்ள கட்சிகளையும் சமாளித்து விடலாம் என்று முதல்வர் எடப்பாடி இந்த திட்டத்தைச் செயல்படுத்தியதாகச் சொல்கிறார்கள்

ops

.
மேலும் இப்படி மறைமுகத் தேர்தல் கொண்டு வந்தால், இந்த முறைப்படி தேர்வு செய்யப்படும் மேயர், பெரும்பான்மை கவுன்சிலர்கள் எல்லோருமே ஒரே கட்சியாக இருந்து ஒவ்வொரு நகராட்சியிலுமே சாதகமான முடிவுகளை எடுக்கலாம் என்பதற்காகவும் இப்படி கொண்டு வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், இந்த புதிய சட்டம் கூட்டணி கட்சிளுக்கு அதிருப்தியை தந்துள்ளதாம். பொதுவாக, எப்போது உள்ளாட்சி தேர்தல் என்றாலும், ஆளும் தரப்புதான் பெரும்பாலான இடங்களில் போட்டியிடுவார்கள். கூட்டணிகளுக்கு பெயரளவுக்குதான் சீட் ஒதுக்கப்படும். அதுபோலவே இந்த முறையும் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை என இந்த 6 முக்கிய மாநகராட்சியை தங்கள் வசம் வைத்துக் கொள்ள அதிமுக விரும்புகிறது. இந்த ஆறு இடங்களில் திருப்பூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய 3 மேயர் பதவிக்கான இடங்களை தேமுதிகவும், தூத்துக்குடி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களை பாஜகவும் தொடர்ந்து கேட்டு வருகிறது.

tamiisai

     இப்படி மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் என்று அறிவித்தால், கூட்டணியில் இருக்கும் கட்சிகள், கட்சி வேறுபாட்டை மறந்து, ஒற்றுமையாக ஒவ்வொரு கவுன்சிலர் பதவிக்கும் ஒழுங்காக வேலைப் பார்ப்பார்கள் எனும் பலே திட்டமும் எடப்பாடி இந்த முடிவை எடுப்பதற்கு காரணம் என்கிறார்கள். 
சர்க்கரை அட்டைதாரர்கள், தங்களது ரேஷன் கார்டுகளை அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்கிற திடீர் அறிவிப்பு, வழக்கம் போல முன்கூட்டியே பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான அறிவிப்பு, ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரருக்கும் ரூ.1000 பணம் என்று உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டே காய் நகர்த்தி வருகிறார் எடப்பாடி என்கிறார்கள்

dmdk

. இந்த தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் எனும் நிலையில், இன்னும் சில அதிரடி அறிவிப்புகள் எடப்பாடி அரசிடம் இருந்து விரைவில் வெளியாகும் என்கிறார்கள் அதிமுகவினர்.