கூட்டணியில் இருக்கிறோம்ல… குடியுரிமை திருத்தத்துக்கு ஆதரவு அளித்தது பற்றி டாக்டர் ராமதாஸ் அடடே விளக்கம்!

கூட்டணியில் இருக்கிறோம்ல… குடியுரிமை திருத்தத்துக்கு ஆதரவு அளித்தது பற்றி டாக்டர் ராமதாஸ் அடடே விளக்கம்!

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்க்கிறோம் ஆனால் கூட்டணியில் இருப்பதால் ஆதரவு அளித்தோம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதற்கு சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்துள்ளது.

குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்க்கிறோம் ஆனால் கூட்டணியில் இருப்பதால் ஆதரவு அளித்தோம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியிருப்பதற்கு சமூக ஊடகங்களில் கண்டனம் எழுந்துள்ளது.
சென்னை விமானநிலையத்தில் இன்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன் என்று டாக்டர் ராமதாஸிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

ramadoss

“கூட்டணி என்பதால் ஆதரித்துத்தான் ஆக வேண்டும். ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. நாங்கள் இந்த குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவு அளித்தோம் என்பதால் ஈழத் தமிழர்களுக்கு எதிராக வாக்களித்தோம் என்று அர்த்தம் இல்லை. அன்புமணி ராமதாசுக்கு அமைச்சர் பதவியை அளிக்க பா.ஜ.க முன்வந்தால் அதை ஏற்காது” என்றார்.

ramadoss

கூட்டணியிலிருந்தால் எதை வேண்டுமானாலும் ஆதரிப்பீர்களா, உங்களுக்கு என்று சுய நிலைப்பாடு இல்லையா, கூட்டணியில் சேர்ந்துவிட்டால் அது கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் கண்ணை மூடிக்கொடு ஆதரிக்க வேண்டும் என்று ஏதாவது உள்ளதா? கூட்டணியில் இருக்கும்போது தி.மு.க கொண்டு வந்த துணைக்கோள் நகரம், பறக்கும் சாலை என பல்வேறு திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிறுத்திய பெருமை கொண்ட பா.ம.க இப்படி மண்டியிடலாமா என்று எல்லாம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.