கூடிய விரைவில் ‘வாட்ஸ்அப் பே’ சேவை அறிமுகம் – இனி ஈசியா மொபைல் பணப்பரிமாற்றம் செய்யலாம்!

 

கூடிய விரைவில் ‘வாட்ஸ்அப் பே’ சேவை அறிமுகம் – இனி ஈசியா மொபைல் பணப்பரிமாற்றம் செய்யலாம்!

வெகுவிரைவில் வாட்ஸ்அப் பே சேவை இந்தியாவில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி: வெகுவிரைவில் வாட்ஸ்அப் பே சேவை இந்தியாவில் தொடங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாட்ஸ்அப் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வகையில் கடந்த 2018-ஆம் ஆண்டு வாட்ஸ்அப் நிறுவனம் சுமார் பத்து லட்சம் பேருடன் ‘வாட்ஸ்அப் பே’ சேவைக்கான சோதனையை ஆரம்பித்தது. ஆனால் அப்போது இந்த சேவைக்கு அரசு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் தற்காலிகமாக இந்த சேவை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது வாட்ஸ்அப் பே சேவைக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது.

ttn

இதனால் வாட்ஸ்அப் பேமன்ட் சேவையை அந்நிறுவனம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இனிமேல் வழங்க முடியும்.  முதற்கட்டமாக சுமார் ஒரு கோடி பேருக்கு வாட்ஸ்அப் பே சேவை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது. யு.பி.ஐ. மூலம் மொபைலில் பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள வாட்ஸ்அப் பே சேவை வழி செய்யும் என்று கூறப்படுகிறது. இது நிகழ்ந்தால் நாட்டின் மிகப்பெரும் மொபைல் பேமண்ட் சேவைகளில் ஒன்றாக வாட்ஸ்அப் பே உருவெடுக்கும்.