கூகுள் பிக்சல் ஸ்லேட் சிறப்பம்சங்கள்!!!

 

கூகுள் பிக்சல் ஸ்லேட் சிறப்பம்சங்கள்!!!

கூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுடன் தனது புதிய டேப்லெட் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது

கலிபோர்னியா: கூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களுடன் தனது புதிய டேப்லெட் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

கூகுள் நிறுவனம் பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களை அண்மையில் அறிமுக செய்தது. அத்துடன், கூகுள் பிக்சல் ஸ்லேட் எனும் புதிய டேப்லெட் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த டேப்லெட், மிட்நைட் புளு நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை 599 டாலர்களில் துவங்குகிறது. பிக்சல் ஸ்லேட் கீபோர்டு விலை 199 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிக்சல்புக் பேனா விலை 99 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கூகுள் பிக்சல் ஸ்லேட் சிறப்பம்சங்கள்:

**12.3 இன்ச் 3000×2000 பிக்சல் 293 PPI LCD டிஸ்ப்ளே

**க்ரோம் ஓ.எஸ்

**கூகுள் பிக்சல்புக் பேனா சப்போர்ட்

**8 எம்.பி. ஆட்டோஃபோக்கஸ் பிரைமரி கேமரா, f/1.8, 1.12μm பிக்சல்

**8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9, 1.4μm பிக்சல்

**பிக்சல் இம்ப்ரின்ட் கைரேகை சென்சார்

**முன்பக்கம் டூயல் ஸ்பீக்கர்கள், 2 மைக்

**48Wh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்

**இன்டெல் செலரான் பிராசஸர் / 8th Gen இன்டெல் கோர் m3 / கோர் i5 / கோர் i7 பிராசஸர்

**4 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. எஸ்.எஸ்.டி.

**8 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. எஸ்.எஸ்.டி. / 128 ஜி.பி. எஸ்.எஸ்.டி

**16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி.

**டைட்டன் சி செக்யூரிட்டி சிப்

**வைபை, ப்ளூடூத், 2 யு.எஸ்.பி. டைப்-சி, 4K டிஸ்ப்ளே அவுட்புட்