கூகுள் தாய் நிறுவமான ஆல்ஃபபெட் சி.இ.ஓ ஆனார் சுந்தர் பிச்சை!

 

கூகுள் தாய் நிறுவமான ஆல்ஃபபெட் சி.இ.ஓ ஆனார் சுந்தர் பிச்சை!

கூகுள் சி.இ.ஓ-வாக உள்ள சுந்தர் பிச்சை, இனி கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட்டையும் சேர்த்துக் கவனிக்க உள்ளதாக கூகுள் நிறுவனர்கள் அறிவித்துள்ளனர்.

sundar

உலகின் முன்னணி மற்றும் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான முன்பு கூகுளை 21 ஆண்டுகளுக்கு முன்பு லார்ஜ் பேஜ் மற்றும் செர்ஜி பிரெய்ன் ஆகியோர் தொடங்கினர். தற்போது இவர்கள் கூகுளின் தாய் நிறுவமான கூகுள் ஆல்ஃபபெடின் தலைவர் மற்றும் சி.இ.ஓ-வாக உள்ளனர். தற்போது அந்த பதவியில் இருந்தும் விலகப் போவதாக இருவரும் அறிவித்துள்ளனர். இதனால், கூகுளில் தலைமை நிறுவனமான கூகுள் ஆல்ஃபபெட்டின் சி.இ.ஓ-வாக சுந்தர் பிச்சை பதவி ஏற்க உள்ளார். 

sundar

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறுவனத்தின் அன்றாட நிர்வாகத்தை இத்தனை ஆண்டுகள் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்ததை பெருமையாக கருதுகிறோம். ஒரு பெருமைமிக்க பெற்றோராக அதன் தினசரி செயல்பாட்டை இனி நாங்கள் கவனிக்க வேண்டியதில்லை… அதற்கு எங்கள் அன்பு, ஆலோசனை எப்போதும் இருக்கும் ஆனால் தினசரி அல்ல.
இனி தொடர்ந்து கூகிள் மற்றும் ஆல்ஃபபெட் இரண்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் இருப்பார். கூகிளை வழிநடத்துவதற்கும், பிற பெட்ஸின் எங்கள் போர்ட்ஃபோலியோவில் ஆல்ஃபபெட்டின் முதலீட்டை நிர்வகிப்பதற்கும் அவர் நிர்வாக பொறுப்பாளராக இருப்பார். கூகிள் மற்றும் ஆல்ஃபாபெட்டுடன் நாங்கள் நீண்ட காலமாக நெருக்கமாக உள்ளோம். இனி போர்டு உறுப்பினர்கள், பங்குதாரர்கள் மற்றும் இணை நிறுவனர்களாக தீவிரமாக ஈடுபடுவோம். கூடுதலாக, நாங்கள் விரும்பும் தலைப்புகளில் சுந்தருடன் தொடர்ந்து பேச திட்டமிட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

google

பேஜ் மற்றும் செர்ஜி ஆகியோரின் கடிதத்துக்கு சுந்தர் பிச்சை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார். அவர்களின் கடிதத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சுந்தர் பிச்சை, ஆல்ஃபபெட் நீண்ட காலமாக கவனம் செலுத்திவரும் விஷயம் மற்றும் சவால்களை எதிர்கொள்ள ஆர்வமுடன் உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சுந்தர் பிச்சை 2004ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார். 2015ல் கூகுள் சி.இ.ஓ-வாக ஆனார். தற்போது கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் சி.இ.ஓ-வாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.