கூகுள் செயற்கை நுண்ணறிவு ஆய்வுகூடம்.. இப்போது இந்தியாவில்!!

 

கூகுள் செயற்கை நுண்ணறிவு ஆய்வுகூடம்.. இப்போது இந்தியாவில்!!

இனி கூகுள் அசிஸ்டன்ட் அந்தந்த பகுதிகள் சார்ந்த மொழிகளில் கொண்டு வரப்படும். பயனாளர்கள் விருப்ப மொழியை தேர்வு செய்து அதற்கேற்றார்போல் பேசினால் எளிமையில் கூகுள் அசிஸ்டன்ட் உங்களுக்கு உதவும்.

கூகுளின் புதிய செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடம் இந்தியாவில் அமைக்கப்பட்ட இருப்பதாக டெல்லியில் நடந்த மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல தேடுதள நிறுவனமான கூகுள் நிறுவனம் சார்பில் “கூகுள் பார் இந்தியா” என்கிற தலைப்பில் 5வது மாநாடு வியாழனன்று டெல்லியில் நடைபெற்றது. இதில் பலதரப்பட்ட தொழில்நுட்ப வல்லுனர்களுயும் விஞ்ஞானிகளுயும் முக்கிய தலைவர்களும் பங்கேற்றனர்.

இதில் கலந்துகொண்டு பேசிய கூகுள் இந்தியாவின் துணை தலைவரும், தொழில்நுட்ப பொறியாளருமான ஜெய் யாக்னிக் விளக்க உரையாற்றினார். இவர் கூறுகையில், இந்தியாவில், குறிப்பாக பெங்களூருவில் உலக தரம் கொண்ட ‘ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ்’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட இருக்கிறது.

Jay yagnik

இதில் சிறந்த விஞ்ஞானிகளை ஈடுபடுத்தி கணினிகளின் அடிப்படையில் மாற்றங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியன குறித்து ஆய்வுகள் நடத்தி அதில் பல மேம்பாடுகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் விவசாயம், கல்வி, சுகாதாரம் போன்றவற்றில் தொழில்நுட்ப மேம்பாடுகளை அதிநவீனமயமாகி இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப செயலிகள் மூலம் பயனாளர்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட இருக்கிறது.

google

இந்த ஆய்வின் மூலம் நாட்டில் பல பகுதிகளில் வரலாறு காணாத முன்னேற்றம் இருக்கும். அதே போல் இந்தியாவின் பொருளாதாரமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் உச்சத்தை தொடும். மேலும், பெங்களூருவில் புதிதாக நிறுவ இருக்கும் இந்த தொழில்நுட்ப செயற்கை நுண்ணறிவு ஆய்வுக்கூடத்திற்கு பிரபல விஞ்ஞானி மணிஷ் குப்தா தான் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் உள்ளார் என்பதையும் கூகுள் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் தெரிவித்தார்.

*கூகிள் அசிஸ்டண்ட்*

google

கூகிள் அசிஸ்டண்ட் குறித்து பேசிய ஜெய் யாக்னிக், இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பலர் குறைந்தபட்ச ஆங்கிலமே தெரிந்து வைத்திருபலதால், இனி கூகுள் அசிஸ்டன்ட் அந்தந்த பகுதிகள் சார்ந்த மொழிகளில் கொண்டு வரப்படும். பயனாளர்கள் விருப்ப மொழியை தேர்வு செய்து அதற்கேற்றார்போல் பேசினால் எளிமையில் கூகுள் அசிஸ்டன்ட் உங்களுக்கு உதவும். இதற்கான முழு வேலைகளும் தற்போது நடைபெற்று வருகிறது என்றார்.