குஷ்பு ரிட்டர்ன்ஸ்!

 

குஷ்பு ரிட்டர்ன்ஸ்!

ஆலோசனை கேட்டு முழுதாக 12 மணி நேரம் முடிவதற்குள், ஏகோபித்த ஆதரவுடன் சினிமாவுக்கு திரும்புவதை குஷ்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கதை கேட்க தயாராக இருக்கிறார். சார் கோவில் எல்லாம் கட்டியிருக்காய்ங்க சார். குஷ்பு சார்!

காங்கிரஸ் கட்சியில் கடைசி வரைக்கும் கட்சிப் பொறுப்புதான் தருவாய்ங்க, தேர்தல்ல டிக்கெட் தரமாட்டாய்ங்க போல என நினைத்தாரோ என்னவோ, குஷ்பு இன்று காலை ஒரு டிவீட் போட்டிருந்தார். அதாவது திரும்ப நடிக்க வரலாமா? வேணாமா? கூட்டத்தில் கோவிந்தா போட முடியாது. தரமான பேர்சொல்லும்படியான கேரக்டர்கள் வந்தால் நடிக்கலாம் என்றிருக்கிறேன், மூத்த மகள் காலேஜ் போக ஆரம்பித்துவிட்டார், நேரம் நிறைய கிடைக்கிறது,உங்கள் ஆலோசனை என்ன?” என தனது ஃபாலோயர்களிடம் குஷ்பு கேட்டிருந்தார்.

Evergreen Kushbhu

எங்கிருந்துதான் கிளம்பி வந்தார்களோ தெரியவில்லை அம்புட்டு பேரும். நீங்க திரும்ப சினிமாவுக்கு வரணும், பழைய குஷ்புவா வரணும் என ட்வீட் போட்டுதட்டிவிட்டார்கள். அதில் ஒரு குசும்பர் குஷ்புவை விஜய் தேவரகொண்டாவுக்கு ஹீரொயினாக்கி கதை சொல்ல ஆரம்பித்துவிட்டார் என்றால் பாருங்கள். ஆலோசனை கேட்டு முழுதாக 12 மணி நேரம் முடிவதற்குள், ஏகோபித்த ஆதரவுடன் சினிமாவுக்கு திரும்புவதை குஷ்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். கதை கேட்க தயாராக இருக்கிறார். சார் கோவில் எல்லாம் கட்டியிருக்காய்ங்க சார். குஷ்பு சார்!