“குழந்தை வேணுமா குழந்தை “பேஸ்புக்கில் கூவி கூவி குழந்தை விற்ற கர்ப்பிணி பெண்

“குழந்தை வேணுமா குழந்தை “பேஸ்புக்கில் கூவி கூவி குழந்தை விற்ற கர்ப்பிணி பெண்

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் தனது வயிற்றிலிருக்கும் குழந்தையை பேஸ்புக் மூலம் விற்க முயன்றார். அந்தப் பெண் தனது மைத்துனருடன் சேர்ந்து கொண்டு, குழந்தையை விரும்புவோரைத் தொடர்புகொண்டு பேஸ்புக் மூலம் விற்க முயன்றார்.

அவுரங்காபாத்தில்  ரஞ்சங்கான் ஷென்பூஞ்சி பகுதியில் வசிக்கும் 30 வயதான ஏழு மாதம் கர்ப்பிணியாக இருக்கும் சிவசங்கர் தாகடே, தனது கணவரிடமிருந்து சில நாட்களுக்கு முன் பிரிந்ததால், தன் மைத்துனர் ஒருவரை மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார்.

facebook-crime-78

ஆனால் அவரது முந்தைய திருமணத்தின் மூலம் உருவான வயிற்றிலிருக்கும் குழந்தை மறுமணத்திற்கு தடையாக இருந்ததால், தாகாடே அந்த வயிற்றிலிருக்கும் குழந்தையை விற்க முடிவு செய்தார். இதனால் முகப்புத்தகத்தில் குழந்தை வேண்டுவோர் தொடர்புகொள்ள விளம்பரம் கொடுத்தார்.
இந்த விஷயம் பற்றி பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை தகவல் பெற்று, காவல்துறையினரிடம் புகாரளித்தது. ஞாயிற்றுக்கிழமை, சைபர் பிரிவு போலீஸ், பிறக்காத குழந்தையை விற்க அவர்கள் மேற்கொண்ட முயற்சியைத் தகர்த்து, தாகடேவை கைது செய்தது .
சிறார் நீதிச் சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.