குழந்தைக்கு அபிநந்தன் என பெயர் சூட்டிய லதா ரஜினிகாந்த்

 

குழந்தைக்கு அபிநந்தன் என பெயர் சூட்டிய லதா ரஜினிகாந்த்

பேட்ட படத்தின் 50-ஆவது நாள் விழாவில் கலந்துகொண்ட லதா ரஜினிகாந்த், ஒரு குழந்தைக்கு இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பெயரை சூட்டியுள்ளார்.

சென்னை: பேட்ட படத்தின் 50-ஆவது நாள் விழாவில் கலந்துகொண்ட லதா ரஜினிகாந்த், ஒரு குழந்தைக்கு இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பெயரை சூட்டியுள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, திரிஷா மற்றும் சிம்ரன் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படம் பேட்ட. ரஜினி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இந்தத் திரைப்படம் வெளியாகி நேற்றோடு 50 நாள் நிறைவடைந்தது. 50-ஆவது நாள் விழா பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது, சென்னையில் நடந்த விழாவில் லதா ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

அப்போது மூன்று குழந்தைகளுக்கு பெயர் சூட்டும்படி அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இரண்டு குழந்தைகளுக்கு புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் பெயரையும் மற்றொரு குழந்தைக்கு இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பெயரையும் சூட்டினார்.