‘குழந்தைகளுக்கான மருத்துவ உதவிகள்’ : அமைச்சரை சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ்

 

‘குழந்தைகளுக்கான மருத்துவ உதவிகள்’ : அமைச்சரை சந்தித்த நடிகர் ராகவா லாரன்ஸ்

மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஏழை எளியவர்கள் என பலருக்கும் உதவி செய்து வருகிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் படங்களில் நடிப்பது, படங்கள் இயக்குவது என பிசியாக இருந்தாலும் தொடர்ந்து தனது  மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஏழை எளியவர்கள் என பலருக்கும் உதவி செய்து வருகிறார்.

ttn

இதையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘என்னிடம் நிறைய பேர் உதவி கேட்டு வருகிறார்கள்.

ttn

என்னால் முடிந்த அளவுக்கு நான் அவர்களுக்கு உதவுகிறேன். எந்த பதிவையும் நான் புறக்கணிப்பது இல்லை.ஆனால்  தனி மனிதனாக அதை என்னால் செய்யமுடியாது.

இதனால் அரசாங்கத்தின் உதவியை நாட இருக்கிறேன். முந்தைய  காலங்களில்  முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முன்னாள் அமைச்சர் அன்புமணி ஆகியோரின்  உதவியை பெற்றுள்ளேன் . அதனால் இம்முறை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களையும் சந்திக்கவுள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ்   அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து குழந்தைகளுக்கான மருத்துவ உதவிகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.அப்போது பேசிய விஜயபாஸ்கர் உதவி செய்ய தயாரான இருப்பதாகக் கூறி அவரின் கோரிக்கையை ஏற்றுள்ளார். இவர்கள் சந்திப்பின் போது  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.