குளிரில் நடுங்கிய நாய்க்குட்டி…  ரிக்க்ஷா தொழிலாளி செய்த செயல்… வைரலாகும் புகைப்படம்..! 

குளிரில் நடுங்கிய நாய்க்குட்டி…  ரிக்க்ஷா தொழிலாளி செய்த செயல்… வைரலாகும் புகைப்படம்..! 

மனிதம் முழுவதுமாக செத்துப் போகவில்லை என்பதற்கு உலகம் முழுக்க தினமும் பல்வேறு சம்பவங்கள் நடந்துகொண்டிருப்பதை வைரல் வீடியோக்களில் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். அது போல் ஒரு சம்பவம் டெல்லியில் நடைபெற்றிருக்கிறது.

இந்த வருடம் எப்போதும் இல்லாத அளவிற்கு வட மாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டியெடுக்கிறது. மக்கள் இரண்டு மூன்று கம்பிளியைப் போர்த்தியும் குளிர் தாங்க முடியாமல் கடும் அவஸ்தைப் படுகிறார்கள். கொஞ்சம் வசதி படைத்தவர்கள் விடுமுறை நாட்களில் மொத்தமாக கம்பளி போன்றவையே வாங்கி வந்து வசதியற்ற ஏழைகளுக்கு கொடுப்பது டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு ஏழை ரிக்க்ஷா தொழிலாளி ஒருவர் குளிரில் நடுங்கிக்கொண்டிருந்த தெரு நாய் ஒன்றுக்கு தன்னிடமிருந்த கம்பளியை எடுத்து அதற்கு போர்த்தி தனது ரிக்க்ஷாவில் பாதுகாப்பாக அழைத்துப் போயிருக்கிறார்.

இந்தக்காட்சிகளை புகைப்படங்களாக எடுத்த ஹயாத் என்பவர்’ நான் வேலைக்கு செல்லும் வழியில் இந்த அற்புத காட்சியைப் பார்த்தேன்… முதலில் இந்தப் புகைப்படத்தில் உள்ள  ரிக்க்ஷாவை ஷூம் பண்ணிப்பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்’ என்று ஸ்டேட்டஸ் தட்டிவிட பத்து லட்சத்திற்கும் மேலானவர்கள் லைக்ஸ், ஷேர் என தங்களது மகிழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

ட்விட்டர் உபயோகி ஹயாத்(@sevdazola) என்பவர் தனது கணக்கில் இந்த அழகிய பதிவை ஷேர் செய்துள்ளார்.அவர் தனது வேலைக்கு செல்லும் வழியில் இந்த காட்சியை பார்த்துள்ளார் இதனை ஷேர் செய்து இவ்வாறு எழுதியிருந்தார்,”முதலில் இந்த புகைப்படத்தில் உள்ள ரிக்க்ஷாவை ஜூம் செய்து பார்த்து பின்பு வானங்களுக்கு நன்றி சொல்லுங்கள்”

இந்த ஏழை தொழிலாளியின் நெகிழவைக்கும் செயல், இப்பேற்பட்ட உள்ளங்கள் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது போல!