குற்றாலத்தில் 18 எம்.எல்.ஏக்கள்…… முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை

 

குற்றாலத்தில் 18 எம்.எல்.ஏக்கள்…… முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு விரைவில் வரவிருக்கும் சூழலில் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை:18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு விரைவில் வரவிருக்கும் சூழலில் முதல்வர் பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்த வழக்கில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை சமீபத்தில் வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கானது மூன்றாவது நீதிபதி சத்யநாராயணனிடம் சென்றது. வழக்கு மீதான விசாரணை முடிந்ததை அடுத்து இதன் மீதான தீர்ப்பு இன்னும் சில தினங்களில் வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் குற்றாலத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குற்றாலம் அடுத்த கூவத்தூராக மாறி இருக்கிறது என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், 18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி இருப்பதால் முதல்வர் பழனிசாமி எம்.எல்.ஏக்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதில் தீர்ப்புக்கு பிறகு எந்த மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தீர்ப்பு சாதகமாக வருவது, பாதகமாக வருவது என்பதெல்லாம் அடுத்தபட்சம் ஆனால் தீர்ப்பு வருவதற்குள் தினகரனிடம் இருக்கும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்தும் தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.