குற்றம் நிகழ்ந்த போது நான் மைனர்! -நிர்பயா வழக்கில் பவன் குமார் மனுவை நிராகரித்த நீதிமன்றம்

குற்றம் நிகழ்ந்த போது நான் மைனர்! -நிர்பயா வழக்கில் பவன் குமார் மனுவை நிராகரித்த நீதிமன்றம்

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட பவன் குமார் குப்தா தன்னுடைய உயிரைக் காப்பாற்ற இறுதி முயற்சியில் ஈடுபட்டுவந்தார். குற்றம் நடந்தபோது தான் மைனர் என்றும் எனவே, இதை கருத்தில் கொண்டு தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பவன் குமார் குப்தா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட பவன் குமார் குப்தா தன்னுடைய உயிரைக் காப்பாற்ற இறுதி முயற்சியில் ஈடுபட்டுவந்தார். குற்றம் நடந்தபோது தான் மைனர் என்றும் எனவே, இதை கருத்தில் கொண்டு தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது எத்தனை முறைதான் இந்த பிரச்னையை எழுப்பிக்கொண்டே இருப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அப்போது பவன் குமார் குப்தா தரப்பில் ஆஜரான ஏ.பி.சிங், அவனுடைய பள்ளி சான்றிதழை ஆதாரமாக காட்டி சம்பவம் நடந்தபோது அவன் மைனராக இருந்தான். ஆனால், எந்த நீதிமன்றமும் இதை சான்றிதழாக கருதவில்லை” என்றார்.

nirbhaya-case-victims

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “பவன் குமாரின் உண்மை சான்றிதழை நாங்கள் பெற்றுள்ளோம். அதில் சம்பவம் நடந்தபோது அவனுக்கு 19 வயது பூர்த்தியானது உறுதி செய்யப்பட்டது. இதை அனைத்து நீதிமன்றங்களும் ஏற்றுக்கொண்டன. நிர்பயா வழக்கு விசாரணை நடந்த 2012ம் ஆண்டில் பவன் குமார் வயது தொடர்பான பிரச்னை இல்லை. அப்போது 18 வயது பூர்த்தியடைந்து இருந்ததை பவன் குமார் ஒப்புக்கொண்டிருந்தார்” என்றார். 
இதைத் தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. இதனால், பிப்ரவரி 1ம் தேதி இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.