குறைந்த விலையில் ‘சியோமி எம்.ஐ ஹோம் செக்யூரிட்டி கேமரா பேஸிக்’ இந்தியாவில் அறிமுகம்

 

குறைந்த விலையில் ‘சியோமி எம்.ஐ ஹோம் செக்யூரிட்டி கேமரா பேஸிக்’ இந்தியாவில் அறிமுகம்

குறைந்த விலையில் ‘சியோமி எம்.ஐ ஹோம் செக்யூரிட்டி கேமரா பேஸிக்’ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: குறைந்த விலையில் ‘சியோமி எம்.ஐ ஹோம் செக்யூரிட்டி கேமரா பேஸிக்’ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய புதிய செக்யூரிட்டி கேமராவை சியோமி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அந்த புதிய மாடல் ‘சியோமி எம்.ஐ ஹோம் செக்யூரிட்டி கேமரா பேஸிக்’ என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.2,299 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அறிமுக சலுகையாக குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டும் எம்.ஐ இணையதளத்தில் ரூ.1999 விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி காதலர் தினமான பிப்.14 மதியம் 12 மணி முதல் இந்த செக்யூரிட்டி கேமரா விற்பனைக்கு வெளியாகிறது. இதன் சிறப்பம்சங்களை பொறுத்தவரை 1080p ஃபுல் ஹெச்.டி வீடியோ குவாலிட்டி, அல்ட்ரா வைடு 130 டிகிரி கோணம் கொண்ட லென்ஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம், இன்ஃப்ரா ரெட் இரவு நேர பார்வை, டாக் பேக் வசதி, பாதுகாப்பான சேமிப்பு, பிக்சர் இன் பிக்சர் மல்டி டாஸ்கிங் அமைப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளன. வெள்ளை நிறத்தில் இந்த செக்யூரிட்டி கேமரா தயாரிக்கப்பட்டுள்ளது.