குறைந்த தொகைக்கு ஏலம் போன இளவரசி டயானாவின் உடை! எவ்வளவு தெரியுமா?

 

குறைந்த தொகைக்கு ஏலம் போன இளவரசி டயானாவின் உடை! எவ்வளவு  தெரியுமா?

ஹாலிவுட் நடிகர் ஜான் ட்ரவோல்ட்டாவுடன் இணைந்து அவர் அசத்தல் நடனம் ஆடி அசத்தினார்.

இளவரசி டயானாவின் ஆடை  ஒன்று லண்டனில் மிக குறைந்த விலைக்கு ஏலம் போயுள்ளது. உலக மக்களின் மனத்தை வென்ற இளவரசி டயானா. இங்கிலாந்தில் மட்டுமல்ல உலகெங்கிலும் டயானாவின் நற்குணங்களுக்கு என ஏராளமான  ரசிகர்கள் உள்ளனர்.

ttn

இந்நிலையில் 1985ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட டயானா நீல நிற உடையில் அழகு மிளிர தோன்றினார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல ஹாலிவுட் நடிகர் ஜான் ட்ரவோல்ட்டாவுடன் இணைந்து அவர் அசத்தல் நடனம் ஆடி அசத்தினார். அப்போது இந்த நிகழ்வு உலகம் முழுவதும் பெரிதும் பேசப்பட்டது. 

ttn

இந்நிலையில் டயானா அணிந்திருந்த அந்த ஆடையை லண்டன் கெர்ரி டெய்லர் நிறுவனம் ஏலத்தில் விட்டுள்ளது.

tt

குறைந்தபட்சம் 2,50,000 பவுண்டு முதல் 3,50,000 பவுண்டு வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆடையானது  48,000 பவுண்டுகளுக்கு மட்டுமே ஏலம் போனது. இது இந்திய மதிப்பில்  44 லட்சத்து  84 ஆயிரம் ரூபாய் ஆகும்.  இது டயானா ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது.