குறைந்து கொண்டே வரும் தங்க விலை !

 

குறைந்து கொண்டே வரும் தங்க விலை !

தங்க விலை நேற்று முன் தினம் 152 ரூபாயும் நேற்று 80 ரூபாயும் குறைந்தது. 

இந்த மாத துவக்கத்திலிருந்து ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது. அதன் பின், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த 21ஆம் தேதி முதல் குறைந்து கொண்டே வருகிறது. தங்க விலை நேற்று முன் தினம் 152 ரூபாயும் நேற்று 80 ரூபாயும் குறைந்தது. 

gold

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,614க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.28,912க்கு விற்கப்படுகிறது. ஏழு நாட்களாகத் தங்க விலை ரூ.492 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.47.90க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.47,900க்கு விற்கப்படுகிறது.