குறைந்தது தங்க விலை !

 

குறைந்தது தங்க விலை !

இந்த மாத தொடக்கத்திலிருந்து தங்க விலை ரூ.664 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த மாத துவக்கத்தில் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை மாறி மாறி ஏற்றத்தையும் இறக்கத்தையும் சந்தித்து வந்தது. கடந்த 3 ஆம் தேதி குறையத் தொடங்கிய தங்க விலை இன்று வரை குறைந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். 

Gold

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,625க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.29,000க்கு விற்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்திலிருந்து தங்க விலை ரூ.664 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 47.50க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.300 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளி ரூ.47,500க்கு விற்கப்படுகிறது.