குரூப் தேர்வு முறைகேடுகளில் கைதான ஜெயக்குமாரிடம் இருந்து பல லட்சம் ரொக்கம் பறிமுதல்!

 

குரூப் தேர்வு முறைகேடுகளில் கைதான ஜெயக்குமாரிடம் இருந்து பல லட்சம் ரொக்கம் பறிமுதல்!

அவரை போலீசார் காவலில் எடுத்துக் கடந்த 5 நாட்களுக்கு மேலாக விசாரித்து வருகின்றனர்

நடந்து முடிந்த குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 ஆகிய தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் மூளையாகச் செயல்பட்ட ஜெயக்குமார் கடந்த 6 ஆம் தேதி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒரு நாள் புழல் சிறையில் வைத்து, மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு உத்தரவிட்டார். 

ttn

அதன் படி மறுநாளே, ஜெயக்குமார் மீண்டும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஜெயகுமாரிடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை 10 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். அப்போது, ஜெயக்குமார் தான் இந்த வழக்கில் தவறு செய்யவில்லை என்பதால் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டாம் என்று கூறி அழுதார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் அவரை 7 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டனர். 

அதனையடுத்து அவரை போலீசார் காவலில் எடுத்துக் கடந்த 5 நாட்களுக்கு மேலாக விசாரித்து வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரிடம் 2 கார்கள் மற்றும் பல லட்சம் ரொக்கம் ரூபாய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, ஜெயகுமாரிடம் இருந்த கார் மற்றும் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.