குரு பகவான் ஜோதிடத்தில் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்? 

 

குரு பகவான் ஜோதிடத்தில் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்? 

ஜோதிடத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி பல்வேறு ஜோதிட கிரந்தங்களில் மிகவும் விரிவாக கூறப்பட்டுள்ளது அதனை பற்றி இந்த பதிவில் பார்போம்.

ஜோதிட சாஸ்திரத்தில் குருவினை பிரகஸ்பதி,தனகாரகன்,புத்திரகாரகன்,பொன்னவன் என்றெல்லாம் சிறப்பிக்கிறார்கள் . 

தேவர்களின் குரு,சகல சாஸ்திரங்களும் அறிந்தவர்,நவகிரகங்களில் சக்தி வாய்ந்தவர்,அதிக சுபமானவர்,நன்மை செய்பவர்,எப்போதும் உதவக்கூடியவர் என்று ஜோதிடம் இவரைப் பலவாறாகப் போற்றுகிறது.

guruhjkdcdsl

சூட்சமமான அறிவுக்கு,ஸ்தூல வடிவம் கொடுத்து,பிரஹஸ்பதி எனப் பெயரும் வைத்திருக்கின்றனர்.கிரக வரிசையில் செவ்வாய்க்கும் சனிக்கும் நடுவில் இருப்பார்,குரு. அண்டவெளியில் அவரின் ஓடு பாதை இந்த இரண்டுபேருக்கு இடையே அமைந்திருக்கும். 

இத்தனை சிறப்புகள் வாய்ந்த குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு நாளை இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார்.கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவர் குரு.

குருவின் ஆசிர்வாதத்தை தான் குரு பலன் என்கிறோம்.குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும்.எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். அத்தகைய குரு தரும் பலன்களை தெரிந்து கொள்வோம்.

guruljlksdl

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்தந்த இடங்களில் இருந்தால் என்ன என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்போம்.

குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும்.

 குரு பகவான் 2-ல் இருந்தால் பேச்சாற்றல், அரசு வேலை கிடைக்கும்.

 குரு பகவான் 3-ல் இருந்தால் சகோதர அனுகூலம் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.

 குரு பகவான் 4-ல் இருந்தால் தாய் அனுகூலம், வீடு வாகன யோகம் கிடைக்கும்.

குரு பகவான் 5-ல் இருந்தால் புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.

 குரு பகவான் 6-ல் இருந்தால் போராட்டமில்லாத வாழ்வு மலரும்.

 குரு பகவான் 7-ல் இருந்தால் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

 குரு பகவான் 8-ல் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டு.

 குரு பகவான் 9-ல் இருந்தால் அள்ளிக் கொடுப்பார்.

 குரு பகவான் 10-ல் வந்தால் பதவி மாற்றம் உறுதியாகும்.

குரு பகவான் 11-ல் இருந்தால் செல்வாக்கு, செல்வ நிலையில் உயர்வு உண்டு.

குரு பகவான் 12-ல் இருந்தால் சுபவிரயம்,மங்கள ஓசை, பயணங்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.