குருமூர்த்தி பேசுன பேச்சுக்கு எந்த அதிமுக தொண்டரும் சும்மா இருக்க மாட்டாங்க :அமைச்சர் ஜெயக்குமார்

 

குருமூர்த்தி பேசுன பேச்சுக்கு எந்த அதிமுக தொண்டரும் சும்மா இருக்க மாட்டாங்க :அமைச்சர் ஜெயக்குமார்

இரண்டாகப் பிரிந்த அதிமுக ஒன்று சேர்ந்ததில் எனக்குப் பெரும்பங்கு உண்டு என்றும் எனது அறிவுரையின் படியே ஓ.பி.எஸ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்தார்.

திருச்சியில் நேற்று நடந்த துக்ளக் பத்திரிகையின் பொன்விழாவில், இரண்டாகப் பிரிந்த அதிமுக ஒன்று சேர்ந்ததில் எனக்குப் பெரும்பங்கு உண்டு என்றும் எனது அறிவுரையின் படியே ஓ.பி.எஸ் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் தியானம் செய்தார். அதனால் தான் அவர் மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்று துக்ளக் இதழாசிரியர் குருமூர்த்தி கூறினார். இது குறித்து இன்று காலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் குருமூர்த்திக்கு நாவடக்கம் தேவை என்று கூறினார். 

gurumurthy

அதனையடுத்து, குருமூர்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் எனக்கு ஓ.பி.எஸ் மீது மிகவும் மரியாதை உள்ளது. திருச்சி துக்ளக் கூட்டத்தில் அதைக் கூற காரணம், எனக்கு முன் பேசிய பாண்டே ஜெயாவை ஆதரித்த துக்ளக் அவரே ஏற்ற சசி எதிர்த்தது சரியல்ல என்று கூறினார். பதில் கூறும்போது ஓ பி எஸ் சந்திப்பு, அவர் எப்படி அதிமுகவை மீட்டார் என்று கூறினேன். நான் கூறியதை முழுவதுமாக தெரியாமல் முன்னும் பின்னும் சித்தரித்துப் பரப்புவது சரியல்ல என்று பதிவிட்டிருந்தார். 

minister

இன்று மாலை மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், குருமூர்த்தியின் கருத்தை நான் காலையிலேயே கண்டித்திருந்தேன். ஏற்கனவே, அதிமுகவினரைப் பற்றிப் பேசி வாங்கி கட்டிக் கொண்டது அவருக்கே தெரியும். முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் குருமூர்த்தி. அவர் பேசுன வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டு தான் வருகிறது. அவர் கூறியதைக் கேட்ட எந்த அதிமுக தொண்டரும் சும்மா இருக்க மாட்டார்கள். அப்படி தான் நானும் சொன்னேன். நான் சொன்னதற்குப் பிறகு எதற்கு மழுப்பல் பதிவிட வேண்டும். குருமூர்த்தி ஒரு இதழாசிரியர், அவர் அவர் வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று கூறினார்.