குரங்கை வைத்து அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்-வீடியோ

 

குரங்கை வைத்து அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்-வீடியோ

குரங்கை வைத்து அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

பெங்களூரு: குரங்கை வைத்து அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் தவங்கரேயில் அம்மாநில அரசுக்கு சொந்தமான கேஎஸ்ஆர்டிசி-யில் ஓட்டுனராக பணியாற்றி வருபவர் பிரகாஷ். குரங்கை ஒன்றை வளர்த்து வரும் இவர், அந்த குரங்கை வீட்டு வேலைகள் செய்யவும், தனக்கு உதவி செய்யவும் பல்வேறு பயிற்சி அளித்துள்ளதாக தெரிகிறது. அதேபோல், பணிக்கு வரும் போதும் அந்த குரங்கை அவ்வப்போது அழைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு பேருந்தின் ஸ்டியரிங் மீது குரங்கை அமர வைத்து பேருந்தை பிரகாஷ் இயக்கியுள்ளார். குரங்கு ஸ்டியரிங்கை பிடித்த லாவகமாக ஓட்ட, கியர் மற்றும் பிரேக்கை மட்டும் ஓட்டுநர் பிரகாஷ் கட்டுப்பாட்டில் வைத்து பேருந்தை இயக்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள், அவர் மீது புகார் கொடுத்ததுடன், இதனை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையடுத்து, பேருந்து ஓட்டுநர் பிரகாஷை கர்நாடக மாநில பேருந்து போக்குவரத்து நிர்வாகம், தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்துள்ளதுடன், இதுகுறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.