கும்பமேளாவை காட்டிலும் கங்காசாகர் மேளா குறைந்தது இல்லை…. ஆனால் மத்திய அரசு நிதி தருவதில்லை…. மம்தா குற்றச்சாட்டு…

 

கும்பமேளாவை காட்டிலும் கங்காசாகர் மேளா குறைந்தது இல்லை…. ஆனால் மத்திய அரசு நிதி தருவதில்லை…. மம்தா குற்றச்சாட்டு…

கும்பமேளாவுக்கு எந்தவிதத்திலும் கங்காசாகர் மேளா குறைந்தது இல்லை. ஆனால் இந்த விழாவுக்கு மத்திய அரசு எந்தவித நிதியும் தருவதில்லை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டியுள்ளார்.

கங்கை நதி வங்க கடலில் கலக்கும் இடமான மேற்கு வங்கத்தின் சாகர்தீவில், ஆண்டுதோறும் மகர சங்கராந்தி (ஜனவரி 14) தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்களும், துறவிகளும் புனித நீராடுவதும், அங்குள்ள கபில முனி கோயிலில் வழிப்பாடு நடத்துவம் வழக்கம். இது கங்காசாகர் விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கு வங்க அரசு செய்து வருகிறது.

கபில முனி கோயில்

இந்த ஆண்டும் வழக்கம் போல் கங்காசாகர் விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கு வங்க அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த விழாவுக்கு எந்தவொரு நிதி உதவியையும் அளிப்பதில்லை என மத்திய அரசு மீது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:

மம்தா பானர்ஜி

கும்பமேளாவுக்கு மத்திய அரசு ஏரளாமாக நிதி  கொடுக்கிறது. ஆனால் கும்பமேளாவுக்கு  எந்தவிதத்திலும் குறையாத கங்காசாகர்மேளாவுக்கு மத்திய அரசு எந்தவொரு நிதியையும் கொடுப்பதில்லை. கங்காசாகர் மேம்பாட்டு மற்றும் அடிப்படை கட்டமைப்புகளுக்காக எவரிடமிருந்தும் பணத்தை நாங்கள் பெறுவதும் இல்லை அல்லது பணத்தை எங்களிடம் கொடுங்கள் என நாங்கள் சொல்வதும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.