குட்டி தலயா இது?: வைரலாகும் நடிகர் அஜித் மகனின் க்யூட் போட்டோ!

 

குட்டி தலயா இது?: வைரலாகும் நடிகர் அஜித் மகனின் க்யூட் போட்டோ!

‘விஸ்வாசம்’ ஷூட்டிங்கை முடித்த நடிகர் அஜித் குடும்பத்துடன் கோவா சென்றிருந்த நிலையில் மீண்டும் அவர் சென்னைக்கு திரும்பியுள்ளார்.

சென்னை: ‘விஸ்வாசம்’ ஷூட்டிங்கை முடித்த நடிகர் அஜித் குடும்பத்துடன் கோவா சென்றிருந்த நிலையில் மீண்டும் அவர் சென்னைக்கு திரும்பியுள்ளார்.

வீரம்,வேதாளம், விவேகம் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து 4வது முறையாக அஜித்-சிவா கூட்டணியில் விஸ்வாசம் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், தக்ஷா டீம் மாணவர்களுடன் சேர்ந்து இந்தியாவில் முதன் முறையாக ஏர் டாக்ஸி சோதனையில் ஈடுபட்டு பயிற்சியளித்தார்.

அதைத் தொடர்ந்து தனது குடும்பத்துக்கு நேர ஒதுக்கிய  தல அஜித், மனைவி, மகள், மகனுடன் கோவாவுக்கு  சுற்றுலா சென்றார். தற்போது  சென்னை திரும்பி விட்ட அவரை விமானநிலையத்தில் பார்த்த அவரது ரசிகர்கள்   உற்சாகத்துடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் விமானத்தில் குடும்பத்துடன்  அஜித் இருக்கும் வீடியோ மற்றும்  அவரின் மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.