குட்கா மாமூல், தெர்மோகோல் விஞ்ஞானமும் தான் அ.தி.மு.க.வின் சாதனை: ஸ்டாலின் கடும் தாக்கு!

 

குட்கா மாமூல், தெர்மோகோல் விஞ்ஞானமும் தான் அ.தி.மு.க.வின் சாதனை: ஸ்டாலின் கடும் தாக்கு!

கம்பராமாயணத்தைச் சேக்கிழார் எழுதினார்  என்றும் தெர்மோகோல் விஞ்ஞானமும் தான் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

சேலம்: கம்பராமாயணத்தைச் சேக்கிழார் எழுதினார்  என்றும் தெர்மோகோல் விஞ்ஞானமும் தான் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள் என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

அனல் பறக்கும் பிரச்சாரம்:

stalin

மக்களவை தேர்தலில் நெருங்கி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்துத் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இன்று சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு வாக்கு சேகரித்தார். 

கொடநாட்டில் கொள்ளை- கொலை, குட்கா மாமூல்

kodanadu

அப்போது பொதுமக்கள்  மத்தியில் பேசிய அவர், ‘அதிமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அதிமுக ஆட்சியில், கொடநாட்டில் கொள்ளை-கொலை, குட்கா மாமூல் போன்றவை அரங்கேறியது என்றும், கம்பராமாயணத்தைச் சேக்கிழார் எழுதியது, கம்பராமாயணத்தைச் சேக்கிழார் எழுதினார்  என்றும் தெர்மோகோல் விஞ்ஞானமும் தான் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகள்’ என்று கடுமையாக சாடினார். 

கிரிமினல் கேபினட்

ttn

தொடர்ந்து பேசிய அவர்,  ‘தமிழகத்தில் அமைந்திருப்பது கிரிமினல் கேபினட். அதிமுகவைக் கடுமையாகத் திட்டி தீர்த்த பாமகவுக்குச் சீட்டு மட்டுமின்றி, கேட்டதெல்லாம் கிடைத்ததால் கூட்டணி அமைத்துள்ளது’ என்றும் குறிப்பிட்டார்.