குடும்ப தகராறால் சிதற போகும் ரூ.35 ஆயிரம் கோடி வர்த்தக சாம்ராஜ்யம்! கோத்ரெஜ் குழுமத்தின் பரிதாப நிலை!

 

குடும்ப தகராறால் சிதற போகும் ரூ.35 ஆயிரம் கோடி வர்த்தக சாம்ராஜ்யம்! கோத்ரெஜ் குழுமத்தின் பரிதாப நிலை!

120 ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் பாரம்பரியமிக்க நிறுவனமான கோத்ரெஜ் குழுமம் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் சிதறபோவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோத்ரெஜ் குழுமத்தை பத்தி சின்னதா ஒரு இன்ரோ. 1897ம் ஆண்டு அர்டஷிர் சகோதரர்களால் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பூட்டுக்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வந்தனர். சில பத்தாண்டுகள் உருண்டாடிய பிறகு சோப்புகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் என பல துறைகளில் தன வர்த்தகத்தை விரிவுப்படுத்தியது. இன்று 80 நாடுகளில், 100 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது.

ஆதி கோத்ரெஜ்

இன்றைய தேதியில் கோத்ரெஜ் குழுமத்தின் மொத்த வர்த்தக மதிப்பு சுமார் ரூ.35 ஆயிரம் கோடி. இவ்வளவு பெரிய வர்த்தக குழுமம் தற்போது குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள குடுமிப்புடி சண்டையால் பிரியபோவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதி கோத்ரெஜ் மற்றும் நாதிர் கோத்ரெஜ் ஒரு அணியாகவும், அவர்களது சித்தப்பா வாரிசுகள் ஜாம்ஷயட் மற்றும் ஸ்மிதா கோத்ரெஜ் ஒரு அணியாகவும் பிரிந்து உள்ளனர்.

வர்த்தக வியூகங்கள் தொடர்பாக குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், மும்பையில் உள்ள 1000 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ள வர்த்தகம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜாம்ஷயட் கோத்ரெஜ்

இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர் நிமிஷ் காமபானி மற்றும் வக்கீல் ஜியா மோடி ஜாம்ஷயட் கோத்ரெஜ்-க்கு ஆலோசகராகவும், ஆதி கோத்ரெஜ்-க்கு கோடக் மகிந்திரா வங்கியின் தலைவர் உதய் கோடக் மற்றும் சட்ட நிறுவனத்தின் சிரில் ஷெராப் ஆலோசகராகவும் செயல்படுகின்றனர். 

பல ஆண்டுகளுக்கு முன்பு அம்பானி சகோதரர்கள் இடையே ஏற்பட்ட பாகப்பிரிவினையை சாமானிய மக்களும் பரபரப்பாக பேசினர். தற்போது அதேபோன்று கோத்ரெஜ் குழுமத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.