குடும்பத்துடன் திரௌபதி படம் பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ்: பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் பார்க்க வேண்டிய படம் என கருத்து!

 

குடும்பத்துடன் திரௌபதி படம் பார்த்த பாமக நிறுவனர் ராமதாஸ்: பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் பார்க்க வேண்டிய படம் என கருத்து!

டிரைலர் சமீபத்தில்   வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது  என்பதெல்லாம் தனிக்கதை

இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்  “திரௌபதி”. இப்படத்தில் நடிகை ஷாலினியின்  சகோதரர்  ரிச்சர்ட் ரிஷி , சுசீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ள இந்த படத்தில்  நடிகர் கருணாஸ், ஜீவா ரவி,  பாரதி உட்பட பலர்  நடித்துள்ளனர்.

 

இந்த படம் நாடக காதல் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில்   வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து இப்படத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது  என்பதெல்லாம் தனிக்கதை. 

இந்நிலையில் ‘திரௌபதி’ திரைப்படம் இன்று  வெளியாகியுள்ளது. இப்படத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் தனது குடும்பத்துடன் கண்டுகளித்தார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘பாட்டாளிகளுடன் திரௌபதி திரைப்படம் பார்த்தேன். இன்றைய சமூகத்திற்குத் தேவையான பல செய்திகளைச்  சொல்லும் படம்.

tn

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தும் படம். பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தவறாமல் பார்க்க வேண்டிய படம்! ‘ என்று பதிவிட்டுள்ளார்.