‘குடி’ மக்களுக்குக் கொண்டாட்டம்! புதுச்சேரியில் வந்துவிட்டது 5 லிட்டர் பீர்!

 

‘குடி’ மக்களுக்குக் கொண்டாட்டம்! புதுச்சேரியில் வந்துவிட்டது 5 லிட்டர் பீர்!

அழகிய கடற்கரை, அரவிந்தர் ஆஸ்ரமம், ஆரோவில் என்று எத்தனையோ சிறப்புக்கள் இருந்தாலும் புதுச்சேரி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது மது வகைகள்தான்.

அழகிய கடற்கரை, அரவிந்தர் ஆஸ்ரமம், ஆரோவில் என்று எத்தனையோ சிறப்புக்கள் இருந்தாலும் புதுச்சேரி என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது மது வகைகள்தான். மது வகைகள் விலை குறைவு என்பதால் குடி மகன்கள் செல்ல விரும்பும் இடமாக புதுச்சேரி உள்ளது. 

ttn

சின்னஞ்சிறிய மாநிலமான புதுச்சேரியில் 400க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகளும், 90க்கும் மேற்பட்ட சாராயக் கடைகளும், 75க்கும் மேற்பட்ட கள்ளுக்கடைகளும் உள்ளன. இங்கு பிராந்தி, விஸ்கி. ஒயின், பீர், வோட்கா, ஜின், ரம் என 1300-க்கும் மேற்பட்ட மது வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ttn

குடி மக்களை எப்போதும் சந்தோஷத்தில் வைத்திருக்கப் புதுச்சேரியில் விதவிதமான மதுக்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 5 லிட்டர் பீர் கேனை புதுச்சேரியில் அறிமுகம் செய்துள்ளனர். இந்த பீர வைத்து குடிக்கலாம், போதை ஏறிய பிறகு குளிக்கலாம்… இந்த ஐந்து லிட்டர் பீர் கேன் வாங்கவே தற்போது புதுச்சேரியில் கூட்டம் அலைமோதுகிறது என்று செய்திகள் வருகின்றன.