குடியுரிமை மசோதாவில் கண்ணுக்கு புலப்படாத இந்து – இஸ்லாம் பிரிவினைவாதம்! – சிவசேனா தாக்கு

 

குடியுரிமை மசோதாவில் கண்ணுக்கு புலப்படாத இந்து – இஸ்லாம் பிரிவினைவாதம்! – சிவசேனா தாக்கு

நாடாளுமன்றத்தில் இன்று குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. என்ன கேள்வி என்றாலும் கேளுங்கள் அதற்கு பதில் அளிக்க தயாராக உள்ளேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு எதிர்க்கட்சிகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. என்ன கேள்வி என்றாலும் கேளுங்கள் அதற்கு பதில் அளிக்க தயாராக உள்ளேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

amit sha

இந்த நிலையில், சிவசேனா கட்சி இந்த மசோதா குறித்து சந்தேகங்களை கிளப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சாம்னாவில் வெளியாகி உள்ள தலையங்கம் இந்த மசோதா இந்து முஸ்லிம் இடையே கண்ணுக்குப் புலப்படாத பிரிவினையை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.

sena

இந்த தலையங்கத்தில், “இந்த மசோதா நாட்டு நலனுக்காக கொண்டுவரப்படவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் பிரச்னைகளுக்கு பஞ்சமில்லை… இதில் புதிதாக பிரச்னைகளை வரவழைக்கிறோம். இந்த புதிய திருத்த மசோதா நாட்டில் இந்து – முஸ்லிம் இடையே கண்ணுக்குப் புலப்படாத பிரிவினையை ஏற்படுத்துவது போல உள்ளது.
இந்த மசோதாவை வடகிழக்கு பிராந்தியங்கள் எதிர்க்கின்றன. பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சி ஆட்சி செய்யும் பீகார் எதிர்க்கிறது. மேற்கு வங்கமும் எதிர்க்கிறது. 
பாகிஸ்தான் போன்ற நமது தொண்டைநாடுகளில் தாக்குதல் சித்ரவதைக்கு ஆளாகும் இந்துக்களை பாதுகாக்க கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியை கேட்டுக்கொள்கிறோம். இந்துக்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு நாடு இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், சட்டவிரோதமாகக் குடியேறும் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால், அது இந்த நாட்டில் மதரீதியான போரை உருவாக்கிவிடாதா?

bill

சட்டவிரோதமாகக் குடியேறியவர்களின் சரியான எண்ணிக்கையை முதலில் வெளியிட வேண்டும். இது லட்சக்கணக்கிலிருந்தால் அவர்கள் எங்கே வைக்கப்படுவார்கள் என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்.
ஒருவர் இந்த புதிய சட்டத் திருத்த மசோதா மூலம் வாக்கு வங்கி அரசியலுக்கு துணை போகிறார் என்றால் அது எப்படி நாட்டு நலனுக்கானதாக இருக்கும். 
அண்டை நாடுகளிலிருந்து சிறுபான்மையினர் அகதிகளாக வருவதை ஊக்குவிப்பதற்கு பதில், இந்து, கிறிஸ்தவர், பார்சி, ஜெயின் போன்ற சிறுபான்மையினரைத் தாக்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தாக்கினால் என்ன விளைவு ஏற்படும் என்பதை மிகக் கடுமையான முறையில் கற்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 

bjb

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியிலிருந்த சிவசேனா தற்போது காங்கிரசுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளது. அது தொடர்ந்து பா.ஜ.க-வுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து வருகிறது.