குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக பற்றி எரிகிறது வடகிழக்கு… துணை ராணுவத்தை அனுப்பிய மத்திய அரசு!

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக பற்றி எரிகிறது வடகிழக்கு… துணை ராணுவத்தை அனுப்பிய மத்திய அரசு!

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க அங்கு 5000 ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்தை ஒடுக்க அங்கு 5000 ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

assam

குடியுரிமை திருத்த மசோதா ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் வரும் இஸ்லாமியர்களைத் தவிர்த்து மற்ற மதத்தினருக்கு குடியுரிமை வழக்க வகை செய்கிறது. மதம் அடிப்படையில் குடியுரிமை என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இருப்பினும் தனக்கு இருக்கும் அசுர பலத்தால் அந்த திருத்தத்தைக் கொண்டு வருவது என்று பா.ஜ.க உறுதியாக உள்ளது.
மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

assam

குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் இந்த சட்டத்துக்கு எதிராக மாணவர்கள், பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அஸ்ஸாம் தலைமைச் செயலகம் அருகே போராட்டக்காரர்கள் மிகக் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லவே அங்கு ராணுவத்தை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

assam

முதல் கட்டமாக அங்கு 5000 துணை ராணுவ வீரர்களைக் குவித்து பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநில காவல் துறையினருடன் இணைந்து துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து போராட்டம் நடந்து வருவதால் அந்த மாநிலங்களில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.