குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்திற்கு நடுவே திருமணம்!

குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்திற்கு நடுவே திருமணம்!

மேலூரில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் போராட்ட திடலில், பெண் வழக்கறிஞரின் திருமணம் நடைபெற்றது. 

மேலூரில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் தொடர் போராட்ட திடலில், பெண் வழக்கறிஞரின் திருமணம் நடைபெற்றது. 

மதுரை மாவட்டம் மேலூரில், அனைத்து ஜமாத்தினர் சார்பில், குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடு சட்டத்திற்கு எதிராக கடந்த 9 நாட்களாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞராக பணி புரியும் மேலூரைச் சேர்ந்த மணமகள் ஆயிஷாபீவிக்கும், மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த நத்தர்ஷா என்ற மணமகனுக்கும் திருமணம் நடைபெற்றது. 

Marriage

இவர்களது திருமணம் மேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்த நிலையில் மாற்றப்பட்டு போராட்ட திடலில் நடைபெற்றது. மேலூர் ஜமாத் தலைவர்கள், இஸ்லாமிய பெரியவர்கள் மற்றும் மணமக்களின் பெற்றோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.