குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம்! – காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கொண்டுவர முடிவு?

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானம்! – காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கொண்டுவர முடிவு?

காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

kerla

தங்கள் மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அனுமதிக்கப் போவது இல்லை என்று கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவித்தன. கேரளா ஒரு படி முன்னேறி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. இதை பின்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களில் இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

protest

காங்கிரஸ் கட்சி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இதனால், இந்த மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து நிறைவேற்றுவது தொடர்பாக தீவிரமாக ஆலோசனை நடந்து வருவதாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. 

amitsha

குடியுரிமை சட்டம் எல்லாம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள விவகாரம், இதில் மாநில அரசுகள் தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று பா.ஜ.க கூறி வரும் நிலையில், எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் மாநில சட்டமன்றங்களில் வரிசையாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்ற தகவல் பா.ஜ.க-வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.