குடியுரிமை சட்ட மசோதா : ஜெகன்மோகன் திடீர் பல்டி!

குடியுரிமை சட்ட மசோதா : ஜெகன்மோகன் திடீர் பல்டி!

ஜெகன்மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரசுக்கு பார்லிமெண்டில் 22 இடங்களும் ராஜ்ய சபையில் 2 இடங்களும் உள்ளன.சமீபத்தில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தை இரண்டு அவைகளிலும் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆதரித்து வாக்களித்தது.

jegan

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஜெகன் மோகனை கடுமையாக விமர்சித்தன.இஸ்லாமிய மக்களின் கோபமும் வெளிப்படையாகத் தெரிந்தது. அதைத் தொடர்ந்து துணை முதல்வர் எஸ்.பி அம்ஜத் பாஷா நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் குடியுரிமை சட்டம் குறித்த தங்களது கட்சியின் நிலைப்பாடு மாறி விட்டதாகத் தெரிவித்தார்.

jegan

தேசிய குடிமக்கள் பதிவேடு ( என்.சி.ஆர்) சட்டமாக கொண்டுவரும் போது இரண்டு அவைகளிலும் அதை எதிர்த்து வாக்களிப்போம்.சிறுபான்மை மக்களை, குறிப்பாக இஸ்லாமியரை பாதிக்கும் எந்த நடவடிக்கைக்கும் முதல்வர் ஜெகன் மோகனின் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரசின் ஆதரவு இருக்காது என்றும் மேலும் தெரிவித்தார்.