குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது !

 

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது !

திமுக சார்பில் பேரணி நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு மக்கள் நீதி மய்யத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையிலும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், திமுக சார்பில் பேரணி நடக்கவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு மக்கள் நீதி மய்யத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த பேரணியில் மக்கள் நீதி மய்யம் கலந்து கொள்ளும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். 

ttn

இதனையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளர்கள் அருணாச்சலம், சவுரிராஜன், செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் உள்ளிட்டோர் திமுக தலைவர் முக ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினர்.




அதன் பின்னர், ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திலும் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக நடத்தும் பேரணியில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ttn

அதனையடுத்து, கமல்ஹாசன்  சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளதால் பேரணியில் பங்கேற்க இயலாது என்பர் மக்கள் நீதி மய்யத்தின் பிரதிநிதிகள் மு.க ஸ்டாலினை சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கியுள்ளனர்.