குடியுரிமையை நிரூபிக்க தாசில்தார் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டும்! – எச்சரிக்கும் ஜவாஹிருல்லா

 

குடியுரிமையை நிரூபிக்க தாசில்தார் அலுவலகத்தில் காத்திருக்க வேண்டும்! – எச்சரிக்கும் ஜவாஹிருல்லா

நாகூர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை எதிர்த்து நாகூர் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில தலைவர் ஜவாஹிருல்லா பங்கேற்றுப் பேசினார். அப்போது அவ

குடியுரிமையை நிரூபிக்க பலரும் மத்திய அரசு அமைக்கும் அலுவலகம் அல்லது தாசில்தார் அலுவலக வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வரும் என்று ஜவாஹிருல்லா கவலை தெரிவித்துள்ளார்.

caa-protest-tamil

நாகூர் மக்கள் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகியவற்றை எதிர்த்து நாகூர் பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில தலைவர் ஜவாஹிருல்லா பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது… “சி.ஏ,ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் ஆகிய மூன்றும் மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட திரிசூலமாகும். வருகிற ஏப்ரல் மாதம் கணக்கெடுப்பு தொடங்க உள்ளது. அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கு பதில் இல்லை என்றால் சந்தேக குடிமகன் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். எப்படி பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கி வாசலில் காத்திருந்தோமோ அது போல சந்தேக குடிமகன் என்ற பட்டியலிலிருந்து நம் பெயரை நீக்கத் தாசில்தான் அலுவலகத்தில் காத்துக்கிடக்க வேண்டிய நிலை வந்துவிடும்.
குடியுரிமை திருத்த மசோதாவுக்குத் தமிழகத்தைச் சேர்ந்த 11 எம்.பி-க்கள் வாக்களித்தது தனக்குத் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார்.

eps-89

இந்த சட்டத்தின் பேராபத்து பற்றிக் கூறியபிறகு, யாராவது பாதிக்கப்பட்டால் எங்களிடம் எடுத்துக் கூறுங்கள் என்ற பேசுகிறார். இந்த சட்டத்தால் பாதிக்கப்படப் போகும் முதல் நபரே எடப்பாடி பழனிசாமியாகத்தான் இருப்பார் என்பதை அவர் மறுத்துவிட முடியாது. 
இந்த சட்டத்தின் ஆபத்தை உணர்ந்த அண்டை மாநிலங்கள் இதை ஏற்க மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றின. அதேபோல் நாமும் நிறைவேற்ற வேண்டும். அப்படி தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றால் தமிழக மக்கள் தீர்மானம் நிறைவேற்றிட வைப்பார்கள்” என்றார்.