குடியுரிமைச் சட்டதை விமர்சிக்கும் அமெரிக்க எம்.பி பிரமிளா ஜெயபால்

குடியுரிமைச் சட்டதை விமர்சிக்கும் அமெரிக்க எம்.பி பிரமிளா ஜெயபால்

கடந்தவாரம் அமெரிக்க எம்.பி-க்கள் அடங்கிய குழுவை சந்திப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்தச் சந்திப்பை கேன்சல் செய்துவிட்டார் இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.அதற்கு காரணம் அந்தக் குழுவில் இந்திய வம்சாவளி எம்.பி பிரமிளா ஜெயபாலின் பெயர் சேர்க்கப்பட்டது ஜெய்சங்கரிடம் தெரிவிக்கப்படாததுதான் என்று தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் கடுமையான விமர்சனங்களை வைத்து இருக்கிறார் பிரமிளா. ஜம்மு காஷ்மீர் விவகாரம் முதலே மோடி அரசை விமர்சித்து வரும் பிரமிளா,அமெரிக்க எம்.பி-க்களை சந்திக்கும்போது இதில் யார் யார் கலந்துகொள்ளலாம் என்று ஒரு வெளிநாடு (இந்தியா) எப்படி உத்தரவிடலாம் என்று கேட்டிருக்கிறார். 

2017-ல்  இந்தியாவில் நிலவும் மதச்சுதந்திரம் பற்றி மோடியிடம் கேள்வி எழுப்பினேன். இப்போது நிலவரம் அதைவிட மோசமாக ஆகிவிட்டது. இந்தியா முழுவதும் மத சிறுபான்மை மக்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. குடியுரிமை சீர்திருத்தச் சட்டம் இந்திய அரசியல் அமைப்பில் இதுவரை கொண்டுவரப்படாத சீர்திருத்தம். என்.ஆர்.சி மூலம் புலம் பெயர்ந்த சிறுபான்மை மக்கள் குடியுரிமை, வாக்குரிமை பெறுவதைத் தடுக்க முடியும்.
அரசுக்கு எதிரான போராட்டங்கள் குறித்த செய்திகளை ஒளிபரப வேண்டாம் என செய்திச் சேனல்களுக்கு ஆலோசனை (!) அளிப்பது கவலை தருகிறது.என்று சொல்லி இருக்கும் பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர்.

https://www.washingtonpost.com/opinions/2019/12/23/indias-foreign-minister-refused-meet-me-i-wont-stop-speaking-out-human-rights/