குடியுரிமைக்கெதிராக காரில் பேசிய கவிஞர் சர்க்கார் -காவல்நிலையத்தில் ஒப்படைத்த ‘உபேர்’ கார் ட்ரைவர் 

குடியுரிமைக்கெதிராக காரில் பேசிய கவிஞர் சர்க்கார் -காவல்நிலையத்தில் ஒப்படைத்த ‘உபேர்’ கார் ட்ரைவர் 

ஜெய்ப்பூர் கவிஞர் பாப்பாதித்யா சர்க்கார் ‘CAA வுக்கு எதிர்ப்பாக பேசியதால் காவல்துறையில் ஒப்படைத்த,  அவரை அழைத்துச் சென்ற உபேர்  டிரைவரை அந்நிறுவனம் இடைநீக்கம் செய்தது 

ஜெய்ப்பூர் கவிஞர் பாப்பாதித்யா சர்க்கார் ‘CAA வுக்கு எதிர்ப்பாக பேசியதால் காவல்துறையில் ஒப்படைத்த,  அவரை அழைத்துச் சென்ற உபேர்  டிரைவரை அந்நிறுவனம் இடைநீக்கம் செய்தது 

uber

மும்பையில்  ரோஹித் சிங் என்ற  உபேர் டிரைவரை அந்த நிறுவனம் தற்காலிக வேலை நீக்கம் செய்துள்ளது 
அவரை விசாரித்தபோது தன்னுடைய வண்டியில் வந்த ஜெய்ப்பூர் கவிஞர் பாப்பாதித்யா சர்க்கார் அரசுக்கெதிராக பேசியதாகவும் ,குடியுரிமை சட்டத்தை விமர்சித்ததாகவும் ,அதனால் தான் பயந்து போய் இவர் தேசவிரோதமானவர் என நினைத்து  , ​​ ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்காக மாற்றுப்பாதையில் போவதாக பயணியிடம் கூறிவிட்டு    சர்காரை சாண்டாக்ரூஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறினார் .

uber

ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வசிக்கும்  23 வயதான  கவிஞர்,சர்க்கார்    CAA எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்க  குர்லா நகரத்திற்குச் சென்றார். இந்த சம்பவம் சமூக ஊடக தளங்களில் கவனத்தை ஈர்த்த பின்னர், மும்பை  உபெர் இந்தியா நிறுவனம்  இந்த விஷயத்தை அறிந்து அந்த ட்ரைவர் மீது நடவடிக்கை எடுத்தது .