குடியிருக்க வீடின்றி நடுத்தெருவில் கதறி அழும் கொல்லங்குடி கருப்பாயி..

குடியிருக்க வீடின்றி நடுத்தெருவில் கதறி அழும் கொல்லங்குடி கருப்பாயி..

கொல்லங்குடி கருப்பாயி என்னும் நாட்டுப்புறப் பாடகியை யாரும் அவ்வளவு லேசில் மறந்துவிட முடியாது. குடியிருக்க வீடின்றி அவர் நடுத்தெருவில் கண்ணீருடன் அமர்ந்திருக்கும் காட்சியை முகநூல் பதிவில் விவரிக்கிறார் ஒரு பதிவர். சொந்தத் தாயின் கண்ணீரையே கண்டுகொள்ளாத நடிகர் சங்கத் தலைவர் நாசர் இந்தத் தாய்க்கு எதாவது செய்துவிடப்போகிறார் என்ற கேள்வி இருந்தபோதும் மற்றவர்கள் யாராவது உதவமாட்டார்களா என்கிற நப்பாசையில் இச்செய்தியைக் கூடுமானவரை பகிருங்கள் நண்பர்களே…

karuppai

குருசாமி மயில் வாகனன் கண்ணீர் விட்டுக் கதறுகிறாள் கலைக்குயில் கருப்பாயி.

கொல்லங்குடி இரண்டு விசயங்களுக்காகப் புகழ்பெற்றது. ஒன்று காளி, இன்னொன்று கருப்பாயி. காளியைத் தெரியாதவன்கூட இருக்கலாம். ஆனால் கருப்பாயியைத் தெரியாதவன் இருக்க முடியாது. அப்படி ஒருவன் இருந்தால் அவன் தமிழ் மரபு விரும்பாத பிக்பாஸ் வீட்டிற்குள் வளர்ந்தவனாக இருப்பான்.

கருப்பாயி வெறும் பாடகியல்ல. அவள் ஒரு கலைஞி.
பாடலின் ராகத்திற்குள் சொற்களைக் கோர்க்கின்ற தையல்காரி.
அவளால் சொற்களுக்குத் தகுந்தாற்போல் ராகத்தையும் வளைக்க முடியும்.
ராகத்திற்குத் தகுந்தாற்போல் சொற்களையும் நிமிர்த்த முடியும்.

karuppai

கருப்பாயி வெறும் பாடகியல்ல.
அவள் ஒரு கதைப் பாடகி. பாடிக்கொண்டிருக்கும்போதே கதையை உருவாக்கிக் கொள்வாள்.
எந்தக் கதையையும் அவளால் பாடலாக்க முடியும்.

கருப்பாயிபோல் பாடக்கூடியவர்களில் தற்சமயம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவர் கருப்பாயி மட்டுமே.
வயதில் இளையவர்கள் ஆனாலும் கே.ஏ.ஜியும் கோட்டைச்சாமியும் முந்திச் சென்றுவிட்டனர்.
கருப்பாயி மட்டும் காத்திருக்கிறாள்.

karupai

கருப்பாயிக்கு நிகர் கருப்பாயி மட்டுமே.

இன்று திருவிழாக் கூட்டங்களில் தின்பண்டங்கள் விற்பவர்களே நாட்டுப்பறப் பாடகர்கள் என்ற பெயரில் மேடை போட்டு முணங்கிக் கொண்டு திரிகிறார்கள்.
அரசுத் திட்டங்களைப் பிரச்சாரம் செய்வது என்ற போர்வையில் கலையைக் கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். கருப்பாயியை ஏமாற்றி அவளது காசைத் தங்களது வாயில் போட்டுக்கொண்ட குருவிகள் சிவகங்கை மாவட்டத்தில் ஏராளம்.

இன்று காலமும் கருப்பாயியை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.நன்றாக இருந்த வீட்டின் மேற்குச் சுவரைப் பக்கத்து வீட்டுக்காரன் மழைத்தண்ணீரை வேண்டுமென்றே வடியவிட்டான்.சுவர் இறங்கிவிட்டது.கூடிய கூட்டமோ வீட்டை இடித்துப் புதுவீடு கட்டுமாறு வற்புறுத்தியதால், வீடு இடிக்கப்பட்டதுமில்லாமல் புதிய வீட்டைப் பெரியவீடாகத் திட்டமிட்டுவிட்டு ஓடிவிட்டது.

karuppayi

குழந்தை குட்டி இல்லாத தனியொரு கிழவிக்குப் பயன்படாத பெரியவீட்டைக் கட்டுவதற்கான செலவு இன்று பத்து லட்சத்திற்கான கடனாகி உருமாறி கருப்பாயியை உருமாற்றியிருக்கிறது.சென்ட்ரிங் போட முடியாமல் தவிக்கிறாள் அந்தக் கிழவி.
ராகமும் தாளமுமாய் இருந்த கணவனின் நினைவுகளை சுவற்றின் பூச்சாய்க் கொண்டிருந்த வீடு இன்று இல்லை.

கருப்பாயி இல்லம் எனப்பெயர் வைக்க விரும்பும் அந்த வீடு கட்டிமுடிக்கும்வரை தான் உயிரோடிருப்போம் எனும் எண்ணமும் இல்லை.

karuppayi

நடிகர் சங்க உறுப்பினரான கருப்பாயிக்கு நடிகர் சங்கத்தை உதவிட வைப்பதற்கு முயற்சி செய்யவும் ஆள் இல்லே.கண்ணீர்விட்டுக் கதறுகிறது அந்தக் கலைக் குயில்.

என்னால் என்ன செய்ய முடியும்?உதவ முடிந்தவர்களிடம் உதவக் கூடிய எண்ணத்தை உருவாக்கும்
இப்படி ஒரு பதிவினைச் செய்வதைத் தவிர.