குடியரசு தலைவர் மாளிகையில் டொனால்டு டிரம்ப்பிற்கு விருந்து: கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்பு!

 

குடியரசு தலைவர் மாளிகையில் டொனால்டு டிரம்ப்பிற்கு  விருந்து: கர்நாடக முதல்வர்  எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்பு!

ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட்டார். பின்னர்  7.30 மணிக்கு டெல்லிக்கு சென்று அங்குள்ள சொகுசு விடுதியில் தங்கினார். 

குஜராத் மாநிலம்  அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று திறந்து வைத்தார்.  இதற்காக நேற்று  நண்பகல் 11.40 மணிக்கு குஜராத்திற்கு   மனைவி மெலனியா, மகள் மற்றும் மருமகனுடன் குஜராத் வந்த டிரம்ப்  காந்தியின் சபர்மதி ஆசிரமதிற்கு சென்று  பார்வையிட்டார்.

ttn

பின்னர் பிற்பகல் 1.05 மணியளவில், ஒரு லட்சம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற  நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், மாலை அங்கிருந்தது கிளம்பி ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை பார்வையிட்டார். பின்னர்  7.30 மணிக்கு டெல்லிக்கு சென்று அங்குள்ள சொகுசு விடுதியில் தங்கினார். 

ttn

இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் டிரம்ப் மற்றும் அவரின் குடும்பத்துக்குக் குடியரசு தலைவர் மாளிகையில்  அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.